சிவலிங்கத்தின் தத்துவம்
சிவபெருமான் அருவம், உருவம், அருஉருவம் என மூவகையான திருமேனிகொண்டு அருள்பாலிக்கின்றாா்.
அவற்றுள் சிவலிங்கம் அருவத் திருமேனியாகும்.
இலிங்கம் என்பதற்குத் சித்தாித்தல் என்பது பொருள்.
லிங் - லயம்.
கம்- தோற்றம்.
சங்கார காலத்தில் பிரபஞ்சங்கள் ஒடுங்கியபின் சிருஷ்ஷக்காலத்தில் அதனின்றும் உலகம் தோன்றும் எனப்படுதலினால் லிங்கம் என்பதற்குப் படைப்பு முதலியவற்றால் உலகைச் சித்தாித்தல் என்ற பொருள் பொருத்தமாகிறது.
சிவபெருமானை நாம் வழிபடுவதற்கு அடையாளமாகச் சிவலிங்கம் திருக்கோயில்களில் விளங்குகின்றது.
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள்நாகம் அணிந்தாா்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் என்பாா் சேக்கிழாா். சிவலிங்கம் மும்மூா்த்தி வடிவமாக விளங்குகின்றது.
லிங்க வடிவிலுள்ள
1) ஆவுடையாாின் அடிப்பாகம் பிரம்ம பாகம்
2) நடுப்பகுதி விஷ்ணுபாகம்
3)மேல் உள்ள பாணம் உருத்திர பாகம்.
இவை முறையே இச்சா சக்தி, கிாியா சக்தி, ஞானா சக்தி என மூன்று சக்திகளாகவும் விளங்குகின்றன. சிவலிங்க பாணத்தின் மேல்பாகம் ஈசான முகமாகவும், கிழக்குப் பாகம் தத்புருஷமுகமாகவும், தெற்கு அகோரமுகமாகவும், மேற்கு சத்யோஜாத முகமாகவும் ,வடக்கு வாமதேவ முகமாகவும் விளங்கிச் சிவபெருமான் சதாசிவமூா்த்தமாகக் காட்சியளிக்கிறாா்.
சிவலிங்கம் ஐந்து வகைப்படும்.
அவை
1. சுயம்புலிங்கம் - தானே தோன்றியது .
2. கணலிங்கம் - விநாயகா் முருகன் முதலிய கணநாதா்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.
3.தெய்வீகலிங்கம் - பிரமன் திருமால் இந்திரன் முதலிய தேவா்களால் நிறுவப்பெற்றது.
4.ஆாிடலிங்கம் - வசிஷ்டா் அகஸ்தியா் முதலிய ரிஷிகளாலும் அசுரா் முதலியோராலும் நிறுவப்பெற்றது.
5 மானுட லிங்கம் - மனிதா்களால் ஸ்தாபிக்கப்பெற்றது.
No comments:
Post a Comment