Monday, October 3, 2022

நவ பைரவர்(ஆலயங்கள்) தலங்கள். மற்றும் பயன்கள்.

#அண்ணாமலை சிவமே
#அருணாச்சல சிவமே....
#அஷ்டமி சிறப்பு பதிவு....

நவ பைரவர்(ஆலயங்கள்) தலங்கள். 
மற்றும் பயன்கள். 

சிதம்பரத்தில் ஸ்ரீ சொர்ண பைரவரை நவ பைரவரத் தலங்கள் என்ற விதிப்படி ஒரே நாளில் 9 ஆலயங்களையும் ஒரு புனித யாத்திரையின் மூலம் சென்று வழிபாடு செய்வது இப்போது நடைமுறையில் உள்ளது.
இந்த ஸ்வர்ண ஆகர்ஷன பைரவருக்கு உச்சி வேளை பூஜையில் நெய், பால், பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அபிஷேகங்களுக்குப் பிறகு நெய்யினால் சுடப்பட்ட வடைகளை கோர்த்து மாலையாக அணிவிக்கின்றனர்‌.

நவ ஆலயங்கள். 
1.சிதம்பரம், 
2.திருக்கண்டியூர், 
3.திருப்பறியலூர்,
4.திருவிற்குடி, 
5.திருவழுவூர், 
6.திருக்கொறுக்கை, 
7.திருக்கடவூர்,
8.திருவதிகை, 
9.திருக்கோயிலூர் -என்பது நவபைரவர் யாத்திரை தலங்கள் ஆகும்.

அடையும் நம்மைகள்(பலன்கள்) 
* சிதம்பர பைரவ தரிசனம் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெருஞ்செல்வமும் கிடைக்கும். 

*திருக்கண்டியூர் பைரவ தரிசனம் பிறவிப் பாவத்தையும், துரோகங்களையும் நீக்கும். இஷ்டதெய்வ பூஜைகளை அலட்சியம் செய்ததனால் வந்த தோஷத்தையும்,மூதாதையர் சாபங்களையும் நீக்கி இல்லறம் மற்றும் உறவினர்களால் பெரும் பலன் கிடைக்கும்.

*திருவிற்குடி பைரவர் தரிசனம் தர்ம நெறிப்படியான வாழ்வினை அளிக்கும்.

*திருவழுவூர் பைரவ தரிசனம் கால்நடை வியாபாரத்தில் பெரும் லாபங்களும், மிருகங்களால் ஏற்படும் ஆபத்துகளை நீக்குவார்.

* திருக்கொறுக்கை பைரவ தரிசனம் அழகும் அதிர்ஷ்டமும் கூடிய இல்லற துணையை அளிக்கும்.

*திருக்கடவூர் பைரவ தரிசனம் அகால மரண பயத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தரும்.

* திருவதிகை பைரவ தரிசனம் வாஸ்து தோஷங்களை நீக்கி வீடு, நிலம் ,ஆடை, ஆபரணங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.

*திருக்கோயிலூர் பைரவ தரிசனம் ஏவல், பில்லி, சூனியம் ,திருஷ்டி தோஷங்களை நீக்கி அமைதியான வாழ்க்கையை தரும். தஞ்சைக்கும்,திருக்கோயிலூருக்கும் இடையில் இருக்கும் இந்த நவபைரவத் தளங்களை சுவர்ண பைரவருக்கு உகந்த அஷ்டமி,பௌவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, பூசம், உத்தரம் ஆகிய நட்சத்திர தினங்களிலும்,சிவராத்திரி, சோமவாரம்,பிரதோஷ நாட்களிலும் தங்களது பிறந்த நாட்களிலும் இந்த ஒன்பது பைரவரை க்ஷேத்திரங்களைத் தரிசித்து எதிர்ப்புகளும்,கடன்களும் நீங்கி நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று ஆரோக்கிய அபிவிருத்தியும் அடையுங்கள். இது அனுபவ உண்மை......

#மகேஷ்வரன்  அருளோடு....

#ரமணர் திருவடிகளே
சரணம் சரணம்....

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...