Tuesday, October 25, 2022

மாங்கல்ய பாக்கியமும், கணவன், மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக் கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம்.

கேதார கௌரி விரதம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனும் பார்வதியும் அர்த்த நாரீசுவரர் ஆன  வரலாறு
***********************************************
சிவபெருமானுடை அஷ்ட மஹா விரதங்க ளுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரத த்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றா ல் அதன் பெருமை க்கு நிகர் எதுவுமில்லை. 

அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்த் தநா ரீசுவராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமய மலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமா ன பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட் டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். 

வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்வி ரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதார கௌரி விரதம் எனவும், ஈசனை வழிபடு கின்றபடியால் கேதா ரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகிறது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந் தும் மங்களகரமாக இருக்க வேண்டி யும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை  வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்கள கரமான வாழ்க்கையை வேண்டி ஆண்க ளும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மாங்கல்ய பாக்கியமும், கணவன், மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக் கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தம்பதியர் இருவரும் ஓரு யிர் ஈருடலாக வரம் பெற இவ்விரதத்தி னை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். 

ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதிக ளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் இவ்விரதத் தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை யும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார் கள் என்பது ஐதீகம்.

விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத் தொ ரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறு ம் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு ஆண்க ள் தமது வலது கையிலும் பெண்கள் தமது இடது கையிலும் அணிந்து கொள்வர். 

சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினை த்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்தநாரியாகவும் அர்த்த நாரீசுவரி யாகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும். 

இவ்விரதத்தை லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களில் தங்கள் தங்கள் குடும்ப வழக்கப்படி அழைப்பர்.

கேதார கௌரி விரதம் தோன்றிய வரலாறு

பிருங்கி என்ற முனிவர் அதி தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்கமா ட்டார். “ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் என் கயிலாயநாதன் தான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது ” என்றெல்லாம் உள்ளா ர்ந்த பக்தியுடன், ஆலவாய் அழகனை மட்டுமே துதித்து வந்தார். பிற கடவுள்களை சற்றும் சிந்திக்காத அவருடை போக்கு, சில சமய ம் அக்கடவுள்களாலேயே அவமதிக்கும் வகையி லும் அமைந்ததுண்டு.

அப்படி ஒரு நிலைக்கு ஆளானவள் பார்வதி. கயிலாயத்தில் தன் கணவருடன் அமர்ந்திரு க்கும் போது பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னைத் திரும்பியே பார்க்காமல் போவதும் அவளுக்கு மனவ ருத்தத்தைத் தந்தது.

எப்படியாவது பிருங்கி முனிவரை, தன்னை யும் வணங்கச் செய்யவேண்டும் என்று விரும்பிய உமையவள், பெருமானி டம் நெருங்கி அமர்ந்து கொண்டாள். இப்படி அமர்ந்திருக்கும்போது, தன்னைத் தவிர்த்து இவரை மட்டும் பிருங்கி முனிவ ரால் எப்படி வலம் வர முடியும்? என்று நினைத்தாள்.

வழக்கம் போல் பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றி ருப்ப தைப் பார்த்தார். என்ன செய்வது என்று குழம் பினார். பிறகு தெளிவாகி ஒரு வண்டாக உரு வெடுத்தார். இருவருக் கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. சக்தி யும் சிவனும் ஒன்று என்ற தத்துவம் புரியா மல், தன் தலைவனை மட்டும் வணங்கும் இந்த முனிவரின் ஆணவத்தை அடக்க எண்ணினாள். 

தன்னை அவமானப்படுத்திய முனிவரின் கால்கள் முடமாக சபித்தாள். அது உடனே பலி த்தது. ஆனாலும் தன் பக்தனை அந்த நிலையி லேயே விட இறைவனுக்கு சம்ம தமில்லை. அவரது கால்களை சரி செய்த தோடு, மூன்றாவ து ஒரு காலையும் உரு வாக்கித் தந்தார். அதோ டு ஒரு கோலை யும் அளித்து, பிருங்கி முனிவர் ஊன்றிச் செல்லவும் வழி செய்து கொடுத்தார்.

தன் கணவர் முனிவருக்கே ஆதரவாக நடப்ப தைப் பார்த்து அன்னை வெகுண்டா ள். உடனே, தன்னை அவருடைய முழுமை யான அன்புக்கு ஆக்கிக் கொள்ளத் தீர்மா னித்தாள். அதற்கு தவமே சிறந்த வழி என்று நம்பி, பூலோகத்தி ற்கு வந்தாள். ஒரு வயல்வெளியைத் தேர்ந்தெ டுத்தாள். சிவனை எண்ணி தவமிருந்தாள்.

கடுமையான தவம். அன்னையின் தவக் கடுமையியால் சுற்றி இருந்த மரங்களும் செடிகளும் கொடிகளும் கருகித் தீய்ந்தன. மனம் இளகினார் மகாதேவன். மேலிருந் து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்து அவளை ஆட்கொண்டார். “ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண் டும்” என்று வேண்டினாள் அன்னை. “தந்தேன்”என்றார் மகாதேவன்.

“உங்களைக் பிரியாத” என்றால் அருகிலே யே இருப்பதல்ல. உடலோடு ஒன்றியதாக உடலை விட்டுப் பிரிக்க முடியாதவளாக…..” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்து கொண்டார் பரமன். அவள் வேண்டிய வரத் தை அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

தேவிக்கு சந்தோஷம். இனி பிருங்கி முனி வர ல்ல, யாருமே என்னை என் தலைவனி டமிருந் து பிரிக்க முடியாது. சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரத்துப் பார்ப்பவரகள், இனி இரண்டு ம் ஒன்றே என்பதை பரிபூர ணமாக உணர வே ண்டும் என சிவனுடன் சேர்ந்து விதி செய்தாள்.

இவ்வாறு அம்பிகை, இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவனிடமிருந் து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரதநாள். 

கேதாரம் என்றால் வயல். கௌரி என்ற பார்வ தி வயல்வெளியில் தவமிருந்து சிவபெருமா னின் அருளைப் பெற்றதால் இந்த விரதம் “கேதாரகௌரி விரதம்” என்று மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

குறிப்பாக தீபாவளி அன்றோ அல்லது தீபாவ ளிக்கு மறுநாளே இந்த விரதமும் மேற்கொள் ளப் படுகிறது. தீபாவளித் திருநாள் குடும்பத்தி ன் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்.

கணவன்  மனைவியிடையே மாறாத அன் பை வளரத்து கொள்ள உதவும் பண்டிகை. தான், தன் கணவர், தன் குழந்தைகள், வீட்டிலுள்ள பிற பெரியவர்கள் என்று அனைவரிடையேயும் அன்பும், பாசமும் நீடித்து நிலைக்க வைக்கும் கொண்டாட்டம்.

தம் மாங்கல்ய பலம் நீடிக்கவும், தன் மீதா ன கணவரின் அன்பு என்றும் குறையாது நிலைத் திருக்க வேண்டும் என்ற வரத்தை ப் பெற கேதார கௌரி விரதத்தை சுமங்க லிகள் கடைப் பிடிக்கிறார்கள். 

அன்றைய தினத்தில், பண்டிகைக்கான பூஜைகளுக்குப் பிறகோ அல்லது முடிந்தா ல் அதற்கு முன்னதாகவோ, பூஜை அறை யில் விளக்கேற்றி, சிவபெருமான் படம் அல்லது லிங்கம் அல்லது சிவ – பார்வதி படத்தின் முன் பக்தியுடன் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

சிவ துதிகளைப் பாட வேண்டும். அம்மன சக்தி பாடல்களைப் பாட வேண்டும். “ஓம் நமசிவாய. சிவாய நம ஓம், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்” என்று பஞ்சாட்சர மந்திரத் தை அன்று முழுவதும் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.

முடிந்தால் சிவலிங்கத்திற்கு பால் அபிஷே க ம் செய்யலாம். அந்த அபிஷேகப் பாலை யே பிரசாதமாக அருந்தலாம். குடும்பத்தி ல் பிறரு க்கும் கொடுக்கலாம். பாயாசம், அல்லது அப்ப ம் நைவேத்தியம் செய்ய லாம். தம் கணவர் மற்றும் தம் குடும்பத்தி னர் அனைவரது நலனுக்காகவும் உமை யொரு பாகனை வேண்டிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...