Thursday, November 10, 2022

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 49 வது தேவாரத்தலம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

தினம் ஒரு திருத்தலம்
(இந்த சிவன்  வேறு) 
*அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில்*

மூலவர் : தயாநிதீஸ்வரர்.

தல விருட்சம் : தென்னை மரம் உள்ளது. 

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு.

ஊர் : வடகுரங்காடுதுறை.

மாவட்டம் : தஞ்சாவூ

தல வரலாறு :

🌹 வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறையாகும். வாலிக்கு வால் அறுந்துபோனது. வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவபெருமானை வணங்கினான்.

🌹 குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கியதால் வாலிக்கு வால் மீண்டும் வளர்ந்தது. அத்தகைய செயல் நடைபெற்றமையால் சிவபெருமான் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. இத்தலத்தில் சிவபெருமான், சிட்டுக்குருவி ஒன்றிற்கும் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.

🌹 ஒரு சமயம் செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோவில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பகுதியை சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. 

🌹 அவள் தன் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை நோக்கி வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். ஆகையால் இறைவனுக்கு குலைவணங்கிநாதர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

தல பெருமை :

🌹 இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 49 வது தேவாரத்தலம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

🌹 இத்தலக் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது. நேர்த்திக்கடனாக அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நிறைவேற்றலாம்.

திருவிழா :

🌹 பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

திறக்கும் நேரம் :

🌹 காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோவில், 
வடகுரங்காடுதுறை - 614 202. 
தஞ்சாவூர் மாவட்டம்.
போன் : + 91 4374 240 491, 244 191.

செல்லும் வழி : 

🌹 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இந்த தலம் 20வது கி.மீ. தொலைவில் அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Followers

சிவ தலங்களில் நந்தியம் சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள்.

 சண்டிகேஸ்வரர் வழிபாடு பற்றிய பதிவுகள்  சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் க...