Thursday, November 10, 2022

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்*நாமக்கல்

தினம் ஒரு திருத்தலம்
*அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்*

மூலவர் : கைலாசநாதர்.

தல விருட்சம் : வில்வ மரம் உள்ளது.

பழமை : 500 வருடங்களுக்குள்.

ஊர் : ராசிபுரம்.

மாவட்டம் : நாமக்கல்.


தல வரலாறு :

🌷 முன்னொரு காலத்தில் கொல்லிமலையை தலைநகராக கொண்டு வல்வில் ஓரி என்ற மன்னன் அப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான இம்மன்னன் சிறந்த சிவபக்தன். ஒருசமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். வனத்தில் நீண்டநேரமாக தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணுக்கு சிக்கவில்லை.

🌷 களைத்துப்போன ஓரி மன்னன், ஓரிடத்தில் வென்பன்றியைக் கண்டான். உடனே பன்றி மீது அம்பை எய்தான். அம்பினால் தாக்கப்பட்ட பன்றி, அங்கிருந்து ஓடியது. மன்னன் பின் தொடர்ந்தான். நீண்டதூரம் ஓடிய பன்றி, ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. 

🌷 மன்னன் புதரை விலக்கியபோது அவ்விடத்தில் சுயம்புலிங்கத்தைக் கண்டான். லிங்கத்தின் நெற்றியில் மன்னன் எய்த அம்பு தாக்கியதில், ரத்தமும் வழிந்து கொண்டிருந்தது. கலங்கிய மன்னன் சிவனை வணங்கினான். சிவன் அவனுக்கு சுயரூபம் காட்டி தானே பன்றியாக வந்ததை உணர்த்தினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான். இக்கோவிலே அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ஆகும். 

தல பெருமை :

🌷 இத்தலத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார் என்பது இதன் சிறப்பம்சமாகும். 

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

🌷 இத்தலத்தில் இருக்கும் கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

திருவிழா :

🌷 இத்தலத்தில் சித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், தைப்பூசம், மாசிமகம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. 

திறக்கும் நேரம்:

🌷 காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், 

ராசிபுரம்-637 408, 

நாமக்கல் மாவட்டம்,

போன் : + 91-4287-223 252, + 91-94435 15036, + 91-99943 79727

செல்லும் வழி : 

🌷 நாமக்கல் மாவட்டத்திலிருந்து 30 கி.மீ., தொலைவிலும், சேலத்திலிருந்து 27 கி.மீ., தொலைவிலும் ராசிபுரம் உள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இக்கோவில் இருக்கிறது.

No comments:

Post a Comment

Followers

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து, சிவபெருமானால் ...