🔥🔱51 #சக்தி_பீடங்களில் மதுரை மீனாட்ச்சி அம்மன் கோவில் 3 வது சக்தி பீடமாகும்💐💐
🔱🔥#மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது என தமிழ்ச் சங்க வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குதான் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பொறுத்தவரை நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களைக் கொண்டது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது என தமிழ்ச் சங்க வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
🙏🏼#இங்குதான் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைப் பொறுத்தவரை நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களைக் கொண்டது.🙏🏼
🔥🔱#இக்கோயிலில் சம அளவில் முக்கியத்துவம் பெற்ற மீனாட்சி அம்மன் சன்னதியும், சுந்தரேசுவரர் சன்னதியும் தனித்தனியே அமைந்துள்ளன. சக்தியின் அம்சமாக அம்மன் குடிகொண்டிருக்கும் முக்கிய இடங்கள் 3 உண்டு. ஒன்று காஞ்சியில் காமாட்சி, மற்றொன்று காசியில் விசாலாட்சி, மூன்றாவதாக மதுரையில் மீனாட்சி என்பர்...🙏🏼
🔥🔱#புராண அடிப்படையில் உமாதேவி மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்தார். மதுரைக்கு அரசியாக பட்டம் சூட்டி, ஆட்சி புரிந்து, திக்விஜயம் செய்து கயிலாயமலைக்குச் சென்று, சிவபெருமானைப் பார்த்த பிறகு, மதுரை வந்து அவரை மணம் புரிந்ததால் இங்கு மீனாட்சிக்கே வழிபாட்டில் முதலிடம் அளிக்கப்படுகிறது.
🙏🏼🔥#முதல் தரிசனம் மீனாட்சிக்கே:
தில்லை (சிதம்பரம்) என்றால் சிவபெருமான் ஆட்சி, மதுரை என்றால் மீனாட்சியின் ஆட்சி. இதனால் விளையாட்டுக்கு ஒருவரிடம் கூறும்போதுகூட ‘உங்கள் வீட்டில் மீனாட்சியா? அல்லது சிதம்பரமா?’ எனக் கேட்பதும் உண்டு. மதுரையில் இன்றும் வழிபாட்டில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பக்தர்கள் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு, பின்னரே சுந்தரேசுவரரை வழிபடுகின்றனர்.
அந்த அளவுக்கு மதுரை என்றாலே மக்களும், கோயிலும் நெருங்கிய தொடர்புடன் வாழ்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வட மாநில பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர்.
🙏🏼🔥#கிழக்கு கோபுரம் எனப்படும் ராஜகோபுரம் பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. இதையொட்டி வீரவசந்தராயர் மண்டபம் அருகில் உள்ள கடைகளில்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
🙏🏼🔥🔱 2 #ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சங்க காலம் முதலே பல்வேறு சவால்களை சந்தித்து வந்திருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றாலும், பல்வேறு மன்னர்களால் பல்வேறு கால கட்டங்களில் சிறிது சிறிதாகக் கட்டி தற்போது பல்வேறு மண்டபங்களுடன் பிரம்மாண்டமாக நிற்கிறது. இக்கோயிலை வைத்தே மதுரை நகரம் உருவாகி இருக்கிறது. தாமரையின் நடுவில் உள்ள மொட்டு கோயிலாகவும், சுற்றியுள்ள இதழ்கள் மதுரையின் வீதிகளாகவும் கருதப்படுகிறது.
#மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
#இந்த_வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
🔥#இசைத் தூண்கள்:
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசைபாடும் 5 இசைத் தூண்கள், ஆயிரம் கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.
🔥🙏🏼#குலசேகர பாண்டியர் எழுப்பிய மீனாட்சி கோயில்:
ஆரம்பத்தில் கோயில் மண்ணால் கட்டப்பட்டு, சுந்தரேசுவரருக்கு மட்டுமே கோயில் இருந்தது. ஞானசம்பந்தர் கி.பி. 7-ம் நூற்றாண்டில் மதுரைக்கு வந்தபோது, மீனாட்சி அம்மனுக்கு தனி கோயில் இல்லை. காலப்போக்கில்தான் கல்லால் ஆன கோயில் உருவாக்கப்பட்டது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குலசேகரபாண்டிய மன்னரால் மீனாட்சிக்கு கோயில் எழுப்பப்பட்டது.
🙏🏼🔥#பூஜை_செய்தால் ஒரு காலத்தில் தண்டனை:
இஸ்லாமிய மன்னர் மாலிக் கபூர் படையெடுப்பின்போது, 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து 48 ஆண்டுகள் மதுரையில் இஸ்லாமியர் ஆட்சி இருந்தததாக வரலாறு கூறுகிறது.
அப்போது சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் கோயில் பூஜைகளுக்கு தடை இருந்ததாக கூறப்படுகிறது. பூஜை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டதாம். 14-ம் நூற்றாண்டின் இறுதியில் குமார கம்பனன் என்ற மன்னர் ஆந்திரா பகுதியில் இருந்து மதுரைக்கு படையெடுத்தபோது, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூஜை, தீபாராதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம். அப்போதும், கோயில் இடிக்கப்பட்ட நிலையில்தான் இருந்ததுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணதேவராயர் அனுப்பிய விசுவநாத நாயக்க மன்னர் மதுரைக்கு வந்தார். அவரது காலத்தில்தான் பாண்டியர் காலத்தில் எப்படி கோயில் அமைந்து இருந்ததோ அதேபோல பழமை மாறாமல் மீனாட்சி அம்மன் கோயில் கருவறை உள்ளிட்ட மண்டபங்கள் கட்டப்பட்டன.
🙏🏼🔥#முழுமையாக்கப்பட்டகோயில்:
ராணி மங்கம்மாள் மற்றும் திருமலை மன்னர் உள்ளிட்ட நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது, மீனாட்சி கோயில் முழு வடிவம் பெற்றுள்ளது.
🔥#சிறப்புகள்:
சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று.
#இது_ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
🙏🏼🔥#இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
🔥🙏🏼#உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.
#இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலைச் சுற்றி வருவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்..🙏🏼🙏🏼🙏🏼
No comments:
Post a Comment