Monday, November 21, 2022

ருத்ராட்சம் பற்றிய பதிவு இது

நமசிவாய வாழ்க 

உருத்திராக்கம் 
*********************

#ருத்ராட்சம் பற்றிய பதிவு இது 
முதல் பதிவு 
****************

(Elacocarpus Ganitrus Roxb, Rudraksha) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. நேபாளத்தில் அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன.

உருத்திராக்கம் சமய நம்பிக்கை 
***************************************
உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் கண்களைக் குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன.

உருத்திராக்கம் குறித்த சில பாடல் கருத்துக்கள் 
=================================
"தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்" - திருப்புகழ் 475
அள்= கூர்மை (திவா). அள் --> அள்கு --> அகு.
வெள் --> வெள்கு -->வெகு = விரும்பு, மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு.
அகு --> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.

"உருப்புலக்கை அணிந்தவர் " - திருவானைக் கோச் செங். 4
அக்கு --> அக்கம் = பெரிய அக்கமணி, 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு.
விளக்கு --> (கலங்கரை) விளக்கம்.

வேறு பெயர்கள் 
*********************
கடவுண்மணி, 
சிவமணி,
 தெய்வமணி, 
நாயகமணி,
 கண்மணி, 
கண்டம், 
கண்டி,
 கண்டிகை, 
முண்மணி என்பன 
அக்கமணியின் மறு பெயர்கள்.

 இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர் முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.

கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.

கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள் மணி என்பதும் கண்மணி என்று புணரும்.

கண்டு --> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம்.
கண்டி --> கண்டிகை = உருத்திராக்க மாலை.
மேலும், சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.

தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி 
==================================

விண்ணவன் = விண்ணு --> விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம். இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லைப் பெருமாள் கோயிலுக்குப் பயன் படுத்துவதைப் பார்க்கிறோம்.

உண்ணம் --> உஷ்ணம் (இதிலும் தலை கீழாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.) உண்ணம்தான் முதல்; உஷ்ணம் அல்ல. உண்ணம் என்பதோடு பொருளால் தொடர்பு கொண்ட பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன.

இன்றையத் தமிழர்க்குப் பொதுவாக மதத்துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணி என்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம் என்பது அக்ஷ என்னும் வடசொற் திரிபே என்றும், ஆரியப் புராணப் புரட்டையெல்லாம் முழு உண்மை என்றும், அதை ஆராய்தல் இறைவனுக்கு மாறான அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆரிய வேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன் என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப் பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச் சொல்லோடு எள்ளளவும் தொடர்பில்லை. அந்தி வண்ணன், அழல் வண்ணன், செம்மேனியன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.

சிவ நெறி குமரி நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்து விட்ட தூய தமிழ் மதமாதலாலும், அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக் கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குள் புகும் முன்னரே, தமிழர் இந்தியா முழுதும் பரவி வட இந்தியத் தமிழர் முன்பு திராவிடராயும், பின்பு பிராகிருதராயும் மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும், அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப்படி முண்மணி என்பதே அப்பெயர்ப் பொருளாம்.

அக்கு என்பதே முதன் முதல் தோன்றிய இயற்கையான பெயர். அது 'அம்' என்னும் பெருமைப் பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது. முத்து -->முத்தம் (பரு முத்து) அக்கம் = பருத்த சிவ மணி.

சைவருக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்; மற்றவை திருநீறும்; திருவைதெழுத்தும்."

தொடரும்.....

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...