#பயணங்கள்
#தேவாரத்தலங்கள்
#திருவாஞ்சியம்
பயணங்கள் எப்பொழுதும் அதிக திட்டமிடல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஊரை நோக்கி செல்லத் தொடங்கினால் சுவையான அனுபவங்கள் கிடைக்கக் கூடும் .நாங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு ஊரை எதிர்பாராமல் போகும் வழியில் பெயர்பலகையில் பார்த்து சென்று தரிசனம் செய்தோம்.
அது தான் ஸ்ரீவாஞ்சியம்.
திருவாரூர் நோக்கி சென்ற போது இந்தப் பெயரைக் கண்டவுடன் அங்கு சென்றோம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25கிமீ தொலைவில் உள்ளது.
அந்த ஊருக்கு பல சிறப்புகள் உள்ளன.
♦️ஸ்ரீவாஞ்சியம் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 70 வது தலம்.
♦️இது அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்று மூவரால் பாடல் பெற்றது.
♦️மங்கலாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி எழுந்தருளியுள்ள கோவில்.
♦️காசிக்கு இணையான 6 தலங்களில் இதுவும் ஒன்று.அவை மாயவரம், சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு,திருவிடைமருதூர் மற்றும் திருவையாறு.
♦️மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்.
♦️சந்தன மரம் தல விருட்சம்.
♦️குப்த கங்கை தீர்த்தம்.
♦️எமன் மனக்கவலை நீங்கப் பெற்றத் தலம்.
♦️இங்கு முதலில் எமனை வணங்கி பின் வாஞ்சிநாத சுவாமியை வணங்க வேண்டும்.
♦️எமன் இத்தலத்தில் க்ஷேத்திர பாலர் ஆவார்.
♦️கொடுப்பினை இருந்தால் தான் இந்த இறைவனை வணங்க முடியும் என்பது நம்பிக்கை.
♦️எம பயம் நீக்கும் தலம்.
♦️அமர்ந்த நிலையில் யோக பைரவர் உள்ளார்.
♦️ஒரே கல்லில் ஆன ராகு கேது தனி சிறப்பு.
♦️பிற்கால சோழர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
♦️இது பித்ரு கடன் நிவர்த்தி தலம்.
♦️இது ராகு கேது பரிகாரத் தலம்.
No comments:
Post a Comment