Friday, November 11, 2022

சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர்.

_நரசிங்கரும் சரபேஸ்வரரும்_


பிரகலாதனைக்  காக்க  மகாவிஷ்ணு,   நரசிம்மமாக  உருவெடுத்து வந்து இரணியனைக் கொன்றார். அப்பொழுது  நரசிம்மமூர்த்தியின்  உக்கிரத்தைத்  தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமசிவனாரை நாட,  சரபேசப் பறவையாக  உருவெடுத்து வந்து நரசிம்மத்தின்  உக்கிரத்தைத்  தணித்தார்  சிவபெருமான்.  இவ்வாறு பிரகலாதன்,  தேவர்கள், தேவேந்திரன்,  பிரம்மா என அனைவரின்  நடுக்கத்தினையும்  தீர்த்ததால் இவர், "நடுக்கந் தீர்த்த பெருமான்"  என்றானார்.  
         
சரபேஸ்வரரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய  இரண்டு இறக்கைகளும்,  நான்கு கால்கள் மேலே தூக்கிய நிலையிலும்,  நான்குக் கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்  சிவபெருமான்.
           
இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் #நரசிம்மர் அடங்கியதாகச்  சொல்வர்  சரபேஸ்வரர்  பறந்து  வந்து  நரசிங்கத்தின் தலையில்  கொத்திக்கொத்தி  அவரது சினத்தைத் தணித்து  திருமாலைப்  பழைய  நிலைக்குச்  சாந்தமானவராக  மாற்றியதாகக்  கூறுவர்.  
      
சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும்,  காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும்  #சாலுவேஸ்வரன்  என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.  
           
இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் #தேவி_பிரத்யங்கிரா  சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும்  கூறுவர். 
      .     
சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக்  #கலியுக_வரதன்  என்றும் குறிப்பிடுகிறார்கள்.  
        "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
          திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலிலும் தனிச் சந்நிதி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பானது.

*சரபேஸ்வரர் ஸ்லோகம்.*

       துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட சரபேஸ்வரர் ஸ்லோகத்தைச் சொல்லலாம்__

"ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய" 
   _ஸ்ரீ சரபாஷ்டகம்

– இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, இராகு காலத்தில்   துதித்து வந்தால்   நமது துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்தும்  பாதுகாப்பு கிட்டும்; எவ்விதத்  தீவினைகளும்  நம்மை அண்டாது.....

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...