Tuesday, November 22, 2022

வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 
#திருவிரிஞ்சிபுரம்
#மார்க்கபந்தீஸ்வரர்
#மரகதாம்பிகை
திருக்கோயில்
வழித்துணைநாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.  விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம்.

இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.

மூலவர்:
மார்க்கபந்தீஸ்வரர்
தாயார்:
மரகதாம்பிகை
தீர்த்தம்:
சிம்ம தீர்த்தம்

புராண வரலாறு :

சிவபெருமானின் திருமுடையைக் காண பிரம்மனும் பாதத்தினைக் கண்டு வருவதாக திருமாலும் சென்ற வேளை நான்முகன் சிவனின் திருமுடியினைத் தொட்டதாகப் பொய் ஒன்றைக் கூறினார் அதற்குத் தண்டனையாக மனித உருவத்தினைப் பெற்று விரிஞ்சிபுரம் இறைவனைப் பூசை செய்து வந்த சிவநாதன் - நயனா, நந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சிவசர்மன் எனப்பெயரிடப்பட்ட அவர் தன் ஜந்தாம் வயதில் தந்தையினை இழந்தார், பூசை செய்யும் உரிமையினை உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார் சிவனிடம் மன்றாட சிவன் அவர் கனவில் தோன்றி திருக்கோயிலின் பிரம்ம தீர்த்தத்தில் மகனை நீராட்டிக் காத்திருக்கும் படியும் தாம் வழிகாட்டுவதாகவும் கூறினார் எனக் கருதப் படுகின்றது. கனவு கண்ட மறுநாள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை ஒரு முதியவர் உருவில் வந்த அம்பலவாணன் சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து, பிரம்ம, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தினை அடைந்து பூசைகள் செய்ய அதை ஏற்க சிவன் தலை சாய்த்ததாகக் கூற்றுக்கள் உளன குறிப்பிடத்தக்கது.

தல சிறப்பு:

கோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாக காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக காய்க்கின்றன.  மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.
சிம்மக்குள நீராடல் - பிரம்மாவிற்குச் சாப விமோசனம் கிடைத்த கார்த்திகை மாதம் இறுதி ஞாயிறு மகளிர் ஈர ஆடையுடன் நீராடிப்பின் விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் உறங்குவர். அன்றிரவு உறங்குபவர்கள் கனவில் பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது தொன்நம்பிக்கை. இச்சிம்மக்குளத் தீர்த்தத்தின் பீஜாட்சர யந்திரம் ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது. 

நேரம் காட்டும் கல் :

கோயிலின் உள்ளே தென்புறத்தில், "நேரம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.

கல்வெட்டுகள் :

கி. பி 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் விஜயநகரப் பேரரசு விரிஞ்சிபுரம் பகுதியினை ஆண்டு வந்தது. மணமகன் வீட்டில் இருப்பவர் மணமகள் வீட்டிற்கு பொன்னை வரதட்சணையாக வழங்கும் முறை இருந்து வந்தது. இத்தகைய முறையில் மாற்றம் வேண்டும் என எண்ணிய மணமகன் வீட்டாரினால் விஜயநகரப் பேரரசிடம் முறையிடப்பெற்றது. கி. பி. 1426 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் படி 'பிராமணர்களில் கன்னடியர், தெலுங்கர், தமிழர், இலாலர் முதலானோர் திருமணம் செய்யுமிடத்து கன்னிகா தானம் ஆக செய்திட வேண்டும். அப்படிச் செய்யாமல் பொன் வாங்கி பெண் கொடுப்பது, பொன் கொடுத்து திருமணம் செய்வது அரசத் துரோகம் ஆகும். மீறுவோர் சாதியிலிருந்து, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவர்.' என விஜய நடரப் பேரரசு|விஜய நகரப் பேரரசினால் உத்தரவிடப்பட்டது என்பது அக்கல்வெட்டில் உள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாவிற்காக தலைகுனிந்த சிவன்:

திருவண்ணாமலையில் ஜோதியாய் அருளிய சிவபெருமானின் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மனிதப் பிறவி எடுத்து மார்க்கபந்தீஸ்வரர் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக சிவபெருமானே தலையை வளைத்து அருளிய பெருமை இத்தலத்திற்கு உண்டு.

கலைநயக் கட்டிடம்:

மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது. இக்கோவிலின் வடக்கு கோபுர வாயில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திறந்த நிலையில் இருக்கும். இதன் வழியாகத்தான் தேவர்கள் அன்றாடம் வந்து இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். கோவிலின் ஒவ்வொரு சுவர்களிலும், தூண்களிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதை காணலாம்.

தீர்த்தகுள மகிமை

இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இது ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தீர்த்தகுள மகிமை:

இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. கோவிலின் முதல் பிராகாரத்தில் தென் கிழக்காக அமைந்துள்ள இது ஒருசிங்கத்தின் வாய் வழியாக நுழைந்து செல்லும் முறையில் நடபாவிக் கிணறாக அமைந்துள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒரே உடலில் 1008 லிங்கம்!

ஒரு பெரிய லிங்கத்தின் உடலில் 1008 சிவலிங்கம் இந்தத் திருத்தலத்தில் அமைந்திருப்பது கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். மூலவர் இத்தலத்தில் சுயம்பு லிங்கமாகவும் சற்று சாய்ந்த கோனத்திலும் காட்சியளிக்கிறார். சிவலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக கதைகளும் உண்டு. மேலும், இச்சிலைகளின் வடிவமைப்பும், கல்வெட்டுக் குறிப்புகளும் கோவிலின் உள்ளே சோழர்களால் மறைக்கப்பட்ட புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. 

அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது.

விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர்.

இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்’ என்றார்.

நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான். சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும்.

பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. 

வழித்துணை நாதர் :

மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு ‘வழித்துணை நாதர்’ என்றும் பெயர் வந்தது.

ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்🙏

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...