முனிஸ்வரர் வரலாறு
ஈஸ்வரன் பட்டம் என்பது மொத்தப்பிரபஞ்சத்திலும் இரண்டேபேருக்குத் தான் உண்டு.
ஒருவர் ஈஸ்வரன் எனப்படும் சிவபெருமான்.மற்றவர் ஈவிரக்கமில்லாமல் தர்மத்தைக்காக்கும் சனீஸ்வரன்மூன்றாவதாக ஈஸ்வரப்பட்டம் பெற்றிருப்பது முனீஸ்வரன்.
சிவபெருமானின் அந்தரங்கக்காவலர்களில் ஒருவரே முனீஸ்வரன்.
முற்காலத்தில் ஒரு கிராமத்தையே இரவுநேரங்களில் காப்பவர் முனிஆவார்.துஷ்டசக்திகளை அடியோடு ஒழித்துக்கட்டும் பொறுப்பு இவருடையது.
2000 வாட்ஸ் மின்சாரம் பாயும் மின்கோபுரங்களையே தூக்கி வீசி எறியும் சக்தியுடையவர் முனீஸ்வரன்.
இவர் செல்லும் பாதையில் இருக்கும் நிறுவனங்கள் விளங்காது.
வேலைக்காரர்கள் வரமாட்டார்கள்.கட்டப்படும் வீடு பாதியிலேயே நிற்கும்.ஒருபோதும் அங்கே யாரும்குடியேற முடியாது.ஒருவேளை குடியேறினாலும் விரைவில் வேறிடம் செல்லும் நிர்ப்பந்தம் உண்டாகும்.அல்லது திடீர் மரணம் நிச்சயம்.
மகாராஷ்டிரபிராமணர்கள் மட்டுமே முனீஸ்வரனைக் கட்டுப்படுத்து சக்தியை அறிந்துள்ளனர்.
முனி என்ற பெயரைக்கொண்ட ஆண்கள்,பெண்கள் அளவற்ற குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால்,இவர்களைப்போல்,
பாசமுள்ள மனிதர்களைப் பார்ப்பது மிக அரிது.இவர்களை தம் வாழ்க்கைத்துணையாகக்கொண்டவர்களின் பாடு திண்டாட்டம் தான்.முனி என்ற பெயரை உடையவர் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்.அதிகாரத்தால் இவர்களை சிறிதுகூடக் கட்டுப்படுத்தமுடியாது.
பல சந்தர்ப்பங்களில்,முனி என்ற பெயரைக்கொண்டவர்களின் நடத்தை மிக வினோதமானதாக இருக்கும்.சிலநேரங்களில்,இவர்கள் தன்னையறியாமல் கூறும் வார்த்தைகள் நிஜமாகும்.
ஒரு குடும்ப வம்சத்தை எடுத்துக்கொண்டால், அதில் சுமார் 100 கிளைகள் இருக்கும்.100 கிளைகள் என்பது 100 குடும்பங்களின் தலைமுறைகள் எனச் சொல்லலாம்.
ஆனால்,ஒவ்வொரு தலைமுறையிலும்,ஒரே ஒரு குடும்பத்தில் உள்ள ஒரே ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கே அவர்களின் குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும்.
அப்படி ஆசிகிடைத்தவர்கள் எப்போதும் மனதில் சோகமயமாகவே காணப்படுவார்.ஆனால்,அவருக்கு சகலசவுபாக்கியங்களும் இருக்கும்.இப்படி குலதெய்வ அருளாசி பெற்றவர்களுக்கு மட்டுமே முனி என்ற பெயரைக்கொண்டவர்கள் அருள்வாக்கு சொல்லுவார்.
முனீஸ்வரர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் நகர்வலம் வருவார்.சுமார் 20 அடி உயரம் அதிகபட்சம் 1000 அடி உயரத்துக்கு வெண்புகை வடிவில் கண்கள் பஸ்ஸின் முன் விளக்கு
(ஹெட் லைட்)அளவுக்கு அதாவது கால்பந்து சைசுக்கு பிரம்மாண்டமாக நெருப்புபோல பிரகாசிக்கும்.நேருக்குநேர் பார்த்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உடனே மரணமடைந்திருக்கிறார்கள்.
முனீஸ்வரர்கோவிலில் மேல்விதானம் இருக்காது.
சிவ சித்தாந்தம்
கனவு காண்பதற்கு எந்த உழைப்பும் தேவையில்லை.
அந்த கனவை நனவாக்கத்தான் கடின உழைப்பும், முயற்சியும் தேவை என்பதை உணர்ந்திடுவோம்.
முனீஸ்வரர் மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்
மண்ணை அளந்த மாயவன் , அவனது உந்திக்கமலத்தில் உதித்த பிரமன் முதலாய தேவா்களும், சிவனை எண்ணத்தில் அகப்படுத்தி நினையாதிருக்கின்றனா் . ஆகாயத்தில் விாிந்து விளங்குபவனை மண்ணுலகோா் கடந்து சென்று அறிய முடியவில்லை .ஆனால் அவன் கண்ணில் கலந்து எங்கும் கடந்து விளங்குகின்றான்.
சிவன் கண்ணகத்தேயும் எங்கும் கடந்து விளங்குகின்றான்.
நன்றி
தினமலர் ஆன்மீக மலர்
No comments:
Post a Comment