Friday, November 4, 2022

அரியும், சிவனும் ஒண்ணு என்பதில் சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை!

🕉️ஹரியும் , சிவனும் ஒன்று
ஒரு சில நாட்களுக்கு முன்பு அடியேன் திருவெண்ணைநல்லூரில் உள்ள வைகுண்டவாச பெருமாள் ஆலயத்திற்கு சென்றேன் அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டேன் . அப்பொழுது ஒரு நண்பர் ஒருவர்  என்னிடம் கேட்டார் நீங்க  எப்பயும் சிவன் கோயில் தானே தினமும் பாட்டு பாடுவிங்க ... நீங்க ஏன் இன்று பெருமாள் கோவில் வந்திர்கள் என்று கேட்டார்  . பெரும்பாலும் 
சிவன் அடியார்கள் ஏன் மற்ற கடவுளை வணங்குவது இல்லை 
மேற்கண்ட கேள்வியை என்னிடம்  நண்பர் கேட்டார்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!"

இதன் பொருள்,

முழுமுதற்கடவுளே! தென்நாட்டில் உன்னை சிவன் என்ற திருப்பெயர் உடையவனாகக் கருதி நாங்கள் வழிபடுகின்றோம்!

நீயே, எந்நாட்டவர்க்கும், அவரவர் ஊரில், அவரவர் மொழியில், பல்வேறு திருப்பெயர்களைக் கொண்டு வழிபடும் இறைவனாகவும் இருக்கிறாய் என்பதையும் நாங்கள் அறிவோம்!

எனவே, எப்பெயரில் நீ இருந்தாலும், எந்நாட்டு மக்களும் எப்பெயரில் உன்னை அழைத்தாலும், அப்பெயரால் வழிபடப்பெறும் இறைவன் நீயே என்று உணர்ந்து இறைவா! உன்னை வணங்கிப் போற்றுகின்றோம்! என்பதே அடியார்களின் குணம் .

இதை தான் மாணிக்கவாசகர் பெருமான் திருவாசகத்தில் திருத்தெள்ளேணம் என்னும்  பதிகத்தில் 
ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!  என்று பாடியுள்ளார் ..

யாதொரு தெய்வம் கொண்டீர் - ஆங்கு அத் தெய்வமாகி

மாதொரு பாகனார் தாம் வருவர்  சைவ சித்தாந்தம் சொல்கிறது 

இதை கேட்ட  நண்பரின் முகத்தில் வியப்பு மற்றும் ஆச்சரியம் 

பிறகு  அடியேன்  அவருக்கு புரியும் படி  இன்னும் தெளிவாக கூறினேன் .

பெருமாளை விட ஒரு சிறந்த சிவ பக்தர் யாரேனும் உண்டோ என்று கேட்டேன் அதற்க்கு அவர் பதில் சொல்ல தெரியாமல் சிந்தித்தார் எது பெருமாள் சிறந்த சிவ பக்தரா என்று கேட்டார் 

ஆம் 

சிவ பூசைக்கு வேண்டிய ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்று குறைந்துவிட்டதால், தனது தாமரையினும் மேலான கண்களில் ஒன்றை இடந்து அர்ச்சிக்க எம் பெருமாள் திருமால் முயல,
தடுத்தாட்கொண்ட சிவபெருமான், சக்கராயுதத்தைத் திருமாலுக்கு வழங்கினார்!
சோழநாடு- திருமாற்பேறு என்ற சிவத்தலத்தில், இத்திருவிளையாடல் நிகழ்ந்தது.

அதனால் தான் சிவபெருமான் ,   (பெருமாள் வேறு-சிவன் வேறு) இல்லை என்று  காட்டவே, எம்பெருமான் சங்கரநாராயணராக தோன்றி அருளினார்.

அது மட்டுமா சிவத்தை உணர்ந்தவர்களுக்கு, பெருமாளே முதல் துணை! கண்ணப்ப நாயனாருக்கும் முன்பே கண்-இடந்து அர்ச்சித்த முதல் நாயனார் எம்பெருமாள்; 

எம்பெருமாளும், எம்பெருமானும் வேறல்லர் ;

என்று கூறினேன் அவரும் இன்பம் அடைந்து சென்றார் ..
தீவிர சிவழிபாடு செய்பவர்கள்,

"நான் சிவனைத் தவிர ஏனைய கடவுள்களை வழிபாடு செய்வதில்லை" என்று கூறுவார்கள் .. 
  
இதற்க்கு முழுமுதற் கடவுளாக, சிவனை வணங்கவில்லை
என்றே பொருளாகும்.ஏனெனில், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓரிறை-சிவபெருமான், ஏனைய கடவுளராகவும் தோன்றுவான் அல்லவா?
எங்கும் சிவமயம் என்று காண்போருக்கு, எந்தக் கடவுளரும், எந்த உயிரினமும் சிவமே அல்லவா? அடியேனுக்கும் அப்படி தான் தோன்றியது 

அரியும், சிவனும் ஒண்ணு என்பதில் சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை!

எங்கும் சிவம் எதிலும் சிவம் அன்பே சிவம்

🪔ஓம் நமசிவாய வாழ்க🪔 

🪔திருச்சிற்றம்பலம்🪔

என்றும் சிவ பணியில் சிவ கீர்த்தனா ஆறுமுகம் 🙏🙏

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...