Sunday, November 27, 2022

பரமத்தி வேலூர்அழகிய காவிரி ஆற்றின் கரையில் அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

நமச்சிவாய வாழ்க!
பரமத்தி வேலூர் என்பது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூரிற்கு பரமத்திவேலூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 

அழகிய காவிரி ஆற்றின் கரையில் அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மன் சமேத அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான, உயர்ந்த மதில் சுவர்களுடன் விளங்குகிறது. 

சிவனடியார், பெருமக்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டிய திருக்கோயில் நீண்ட காலமாக நடை சாத்தப்பட்டு இருக்கிறது. நீண்ட காலம் என்றால் ஏதோ இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அல்ல. அந்த பகுதி மக்கள் கூறியபடி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் பூட்டியுள்ளது. இதற்கு காரணமாக கூறப்படுவது, உள்ளே திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது.
அதற்கு ஏற்றார் போல் கோவிலுக்கு வெளியில் ஈசான திக்கில் சாலை அமைத்து பாலாலயம் செய்து பூசை செய்து வருகின்றனர். 

அருகாமையில் உள்ள குடிமக்களிடம் திருப்பணி சம்பந்தமாக பேச்சு கொடுத்ததில் இலங்கையிலிருந்து யாரோ ஒரு ஸ்தபதி உள்ளே பணி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது யாரும் பணி செய்வதாக தெரியவில்லை.

ஊர் மக்கள் கிட்டத்தட்ட இந்த சிவாலயம் இருப்பதையே மறந்துவிட்டனர்.  

கோயில் புகைப்படங்கள் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

விரைவில் பரமத்தி வேலூரில் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற்று அனைவரும் தரிசனம் செய்ய, ஈசனாரிடம் வின்னப்பிப்போம்

பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலம் செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே!

நமச்சிவாய வாழ்க!

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...