🌹 கார்த்திகை மாத சிறப்புகள்...
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகளோடு தான் இறைவன் அருளியுள்ளார். அதிலும் கார்த்திகை மாதமானது பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. சுப முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் கார்த்திகை மாதமாகும்.
கார்த்திகை மாதங்களில் தல விரதங்களும் அனுஷ்டிக்கப்படுவது உண்டு. காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் பற்றி இங்கு காண்போம்.
கார்த்திகை மாத சிறப்புகள்:
திருமண மாதம் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளது.
சிவபெருமான் காட்சி தந்த மாதம்.
கார்த்திகை விரதம்.
தோஷங்களை நீக்கும் மாதம்.
தீபத் திருநாள்.
தீராத நோய் எல்லாம் தீரும்.
பிரிந்தவர்களை இணைக்கும் கார்த்திகை.
பிறவியில் செய்த பாவங்களை நீக்கும் சிறந்த மாதம்.
கார்த்திகை மாத வளர்பிறை
பிரம்மஹத்தி தோஷங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
பலன் தரும் கார்த்திகை ஞாயிறு.
கார்த்திகை மாத சிறப்புகள்:
1. திருமண மாதம் என்ற சிறப்பு
பெயரை பெற்றுள்ளது
இந்த மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவதால், ‘திருமண மாதம்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இதுதவிர பல சுபகாரியங்களும் கார்த்திகை மாதத்தில் அதிகளவு கொண்டாடப்படுகின்றது. இம்மாதத்தில் விருட்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தான் திருமணம் செய்வதற்கு உகந்த நாளென்று புகழப்படுகின்றது.
2. சிவபெருமான் காட்சி தந்த மாதம்
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த மாதம் இம்மாதமாகும்.
3. கார்த்திகை விரதம்
முருகப்பெருமானை நினைத்து, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
4. தோஷங்களை நீக்கும் மாதம்
கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.
5. தீபத் திருநாள்
கார்த்திகை மாத பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை தீபத் திருநாள் என்றும் அழைப்பர்.
முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இந்தத் திருநாள் வழிபாட்டுக்குரியதாகிறது. இந்நாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
தீராத நோய் எல்லாம் தீரும்
கார்த்திகை நட்சத்திரம் அன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷமான வழிபாடுகளும் அன்னதானமும் நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
6. பிரிந்தவர்களை இணைக்கும் கார்த்திகை
கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிறு கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாக இருப்பதால் கணவன், மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவதற்கான அற்புதமான விரத நாள்.
7. பிறவியில் செய்த பாவங்களை நீக்கும் சிறந்த மாதம்
பௌர்ணமி வெள்ளிக்கிழமை நாளன்று பௌர்ணமி வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இன்னால் பெருமானை வணங்கினால் முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்
8. கார்த்திகை மாத வளர்பிறை
துவாதசி துளசி வழிபாட்டிற்கு சிறந்த தினம். இந்தநாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். கார்த்திகை மாத துவாதசி நாளில், மகாவிஷ்ணு துளசி தேவியை திருமணம் செய்துகொண்டார் என்பது ஐதீகம். எனவே கார்த்திகை மாதம் முழுவதும், துளசியால் மகாவிஷ்ணுவை பூயை செய்து வழிபட்டால் நிறைவான வாழ்வை தருவார்.
9. பிரம்மஹத்தி தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள்
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள்.
10. பலன் தரும் கார்த்திகை ஞாயிறு
கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சிவசக்தியின் அருள் கிடைக்கும்.
🙏 கு பண்பரசு
No comments:
Post a Comment