Friday, December 9, 2022

_அகத்தியர் பூஜித்த சேலம் ஊத்துமலை சித்தர் சக்கரம்

_அகத்தியர் பூஜித்த  சேலம் ஊத்துமலை_



ஸ்தல மலை எனும் ஊத்துமலையில் சித்தர் அகத்தியர் பெருமான் மற்றும்  அவரின் மனைவி லோபமுத்திரா , போகர், போகரின் சீடர் புலிப்பாணி, ரேணுகர், கபிலர் என சித்தர்களின் தவம் செய்த இடமாகும்.

        ஸசரணம்த்யா- ஸ்ரீ சக்கரம்  உபாசனை பெற்ற பின்பு தம் கரங்களால் ஸ்ரீசக்கரம் அமைத்து பூசித்த அருமையான ஆலயம்..
ஒரே பாறை மீது புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்ரம், சிவலிங்கம், நந்தி, ஆசிரமம், அகத்தியர், ரிசி பத்தினி, மற்றும் பல வகையான இயற்கைக் காட்சிகள். 

    கபிலர் தியான குகை: அகத்தியர், கபிலர் உள்ளிட்ட பல சித்தர்கள் தியானம் செய்த, பாறை நீர் ஊற்றுடன் கூடிய அமைதியான தியான குகை, கபிலர் தியான குகை

        தியான குகையில் அமாவாசை - பவுர்ணமி திதிகளில் அருமையான அனுபவங்களை பெறலாம்.. 
ஊத்துமலை சுமார் 2000 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. 

அகஸ்தியர் இங்கு வந்து மலையை குடைந்து ஸ்ரீ சக்ரம்உருவாக்கியிருக்கிறார் அதோடு அவருடைய பத்னி லோபாமுத்ரா தேவியுடன் தான் இருப்பது போலவும் தண்ட கமண்டலுடன் வடிவமைத்திருக்கிறார்.
அகஸ்தியர் கபிலமுனி சுகபரம்ம ரிஷியும் வந்திருப்பதாக கல்வெட்டுகளில் உள்ளது.

 மேலும் சுகர் பிரம்ம ரிஷி இங்கு வந்த பிறகு சேலம் சுகவனேஸ்வரரிடம் வந்நிருந்து தன் சாபத்தை போக்கிக்கொண்டதாக சேலம் சுகவனேஸ்வரர் புராணம் கூறுகிறது. 

இவர்கள் தவிர சப்த ரிஷிகள் மற்றும் கரடி சித்தர் போகர் கன்வர் போன்ற மஹரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்து உள்ளார்கள் என்று  புராண கதையாக இங்கு சொல்கிறார்கள்.

 அதற்கு சான்றாக சப்த ஏழு வித ஊற்றுகளும் இந்த ஊத்துமலையில் உள்ளது அதனால்தான் இந்த மலைக்கு ஊத்து-மலை ஊத்துமலை என்று பெயர் வழங்கலாயிற்று. 
இந்த ஏழு ஊற்றுகளிலும் உள்ள தண்ணீர் நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்ட தண்ணீர் ஆகும். இந்த ஸ்ரீ சக்ர கோவிலுக்கு மேல் சென்றால் மலையின் உச்சி வரும் அங்கு பால சுப்ரமணியர்அருள்பாலிக்கிறார். மயிலை அரவணைத்து கொண்டு காக்ஷி தரும் முருகப்பெருமான்.  இந்த ஊத்துமவையில்மிகப்பெரிய கால பைரவர் சன்னதியும் 
உண்டு.

அகத்தியர் திருவடிகள் சரணம்....

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....