Monday, December 26, 2022

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு மதுராந்தகம் அருள்மிகு ஏரிகாத்த ராமர் ஆலயம்*

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
     *🙏"இன்றைய கோபுர தரிசனம்"..!!🙏*
           #ஏரி__காத்த__ராமர்_கோயில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
⭕*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு மதுராந்தகம் அருள்மிகு ஏரிகாத்த ராமர் ஆலயம்*
        🙏*தினம் ஒரு கோபுர தரிசனம்*🙏

*காலை சூரிய உதயத்தில்*

*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

⭕ *மூலவர் : #ஏரி_காத்த_ராமர்*

⭕*உற்சவர் : கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள்*

⭕*அம்மன்/தாயார் : ஜனகவல்லி*

⭕*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

⭕*ஊர் : மதுராந்தகம்*

⭕*மாவட்டம் : காஞ்சிபுரம்*

⭕*மாநிலம் : தமிழ்நாடு*

🍑*திருவிழா*

*வைகுண்ட ஏகாதசி, சித்திரை நட்சத்திர நாட்களில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.*

*#தலசிறப்பு*

⭕*ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்.*
 
⭕*திறக்கும் நேரம்*

*காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*

⭕*முகவரி

*அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக் கோயில் ,மதுராந்தகம் - 603 306 காஞ்சிபுரம் மாவட்டம்.*

*போன்*

*+91- 4115 253887, 98429 09880, 93814 82008.*

*#பொது_தகவல்*

⭕*ஆனியில் இங்கு #பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் பெரிய பெருமாள் உற்சவம் நடக்கும். அன்று ராமர், புஷ்பக விமானம் போல அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப்பெருமாள் மற்றொரு தேரிலும் உலா செல்வர். இவ்வாறு இங்கு ஒரே விழாவில் இரண்டு தேர்கள் ஓடும்.*

*#பிரார்த்தனை*

⭕*தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இத்தல இறைவனை பிரார்த்தனை செய்யலாம். குழந்தைகள் கல்வி யில் சிறப்புப் பெற, பெரியநம்பி ராமானுஜர் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.*

*#நேர்த்திக்கடன்*

⭕*பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.*

*#தலபெருமை*

⭕*மனைவியின் கரம் பிடித்த ராமன்*

⭕*ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் மூலஸ்தானத்தில், சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். அருகில் லட்சுமணர் இருக்கிறார். ராமர் விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு காட்சி தந்ததாகச் சொல்வர். #தம்பதியர்_ஒற்றுமையுடன்_திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஜனக மகராஜாவின் மகளாகவளர்ந்ததால் இவளுக்கு இப்பெயர்.)*

*#பஞ்ச_அலங்காரம்*

⭕*ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். நவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும். அன்று சுவாமி, சீதை, லட்சுமணருடன் தேரில் எழுந்தருளுவார். ராமானுஜர் பொதுவாக, காவி வஸ்திரம் அணிந்து காட்சி தரும் ராமானுஜரை, இத்தலத்தில் #வெண்ணிற_வஸ்திரத்துடன் கிரகஸ்தர் (குடும்பஸ்தர்) கோலத்தில் தரிசிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் முன்பு இங்கு தீட்சை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக இங்கு வெண்ணிற ஆடையுடன் காட்சியளிக்கிறார். மூலவர், உற்சவர் இருவருக்கும் வெள்ளை ஆடையுடனேயே அலங்காரம் செய்கின்றனர். ராமானுஜரின் இந்த தரிசனம் விசேஷமானது.*

*#ஏரியை_காத்தவர்*

⭕*ராமர் கோயிலுக்குப் பின்புறம் ஒரு ஏரி உள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு ஏரி அடிக்கடி நிறைந்து கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்கு ள்ளாகினர். அப்போது, லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார். ஏரிக்கரையை பலப்படுத்த அவர் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோயி லுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவர்""உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், அவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் அப்பணியை செய்து தருகிறேன்,'' என்றார். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்ததை அறிந்தார். பின்பு, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார்.*

⭕*இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, "ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.*

*#பிரகலாத_வரதன்*

⭕*கம்பராமாயணம் எழுதிய கம்பர், அதை அரங்கேற்றும் முன்பு ராமன் தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இங்கு வந்தபோது, ஓரிடத்தில் சிங்கம் உறுமும் சத்தம் கேட்டது. பயந்துபோன கம்பர், அவ்விடத்தைப் பார்த்தபோது நரசிம்மர் லட்சுமியுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் சிங்க முகமில்லாமல், மனித முகத்துடன் #சாந்த_நரசிம்மர் சிலை வடிக்கப்பட்டது. உற்சவரான இவரை "]#பிரகலாத_வரதன்' என்கின்றனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும்.#ராமர்_பூஜித்த_கருணாகரர்ராமர்_தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் #கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக்காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித்தாயாரையும் போகிப்பொங் கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.*

*#ராமானுஜர்_தீட்சை_பெற்ற_தலம்*

⭕*ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து வந்த ஆளவந்தாரின் சீடர் பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். இவ்வேளையில் ராமானுஜர் அவரிடம் தீட்சை பெறுவதற்காக ஸ்ரீரங்கம் கிளம்பினார். இருவரும் இத்தலத்தில் சந்தித்துக் கொண்டனர். பெரியநம்பி ராமானுஜருக்கு ஆச்சார்யாராக இருந்து இத்தலத்திலேயே "#பஞ்ச_சம்ஸ்காரம்' என்னும் தீட்சை செய்து வைத்தார். இந்த வைபவம் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமியன்று இக்கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் நடக்கும்.*

*#ராமர்_பூஜித்த_கருணாகரர்*

⭕*ராமர் தலமாக இருந்தாலும் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கருணாகரப்பெருமாளே (உற்சவர்) பிரதான மூர்த்தியாக அருளுகிறார். விபண்டகரால் பூஜிக்கப்பட்ட இவரே விழாக் காலங்களில் பிரதானமாக புறப்பாடாகிறார். பங்குனி உத்திரத்தன்று ஜனகவல்லித் தாயாரையும், போகிப்பொங்கலன்று ஆண்டாளையும் மணந்து கொள்பவரும் இவரே ஆவார். இங்கு வந்த ராமர், சீதையை மீட்க அருள வேண்டி இவரை பூஜித்துச் சென்றார். இதனால் இவருக்கு பிரதான இடம் பெற்றிருக்கிறார். தவிர ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு.*

*#யந்திர_சக்கரத்தாழ்வார்*

⭕ *பதினாறு கரங்களுடன் #அக்னி_கிரீடம் அணிந்த சக்கரத்தாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. யந்திரத்துடன் சுவாமியை தரிசிப்பது நிறைந்த பலன் தரும். இவருக்குப் பின்புறமுள்ள யோக நரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார். சித்திரை நட்சத்திர நாட்களில் இச்சன்னதியில் சுதர்சன ஹோமத்துடன் பூஜை நடக்கும்.*

*#குரு_சிஷ்யர்_தரிசனம்*

⭕*ராமானுஜரும், அவருக்கு தீட்சை கொடுத்த பெரியநம்பியும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். ராமானுஜர் தீட்சை பெறும் நிலையில் வணங்கிபடியும், பெரியநம்பி ஞானமுத்திரை காட்டியபடியும் இருக்கின்றனர். இவ்வாறு குரு, சிஷ்யர் இருவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்கலாம். குழந்தைகள் கல்வியில் சிறப்புப் பெற, இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்தச் சன்னதியில் பெரியநம்பி பூஜித்த குழந்தை கண்ணன் இருக்கிறார். இவர் கையில் வெண்ணெயுடன், வலக்காலை மலர் மீது வைத்த நிலையில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு தொட்டில் சேவை செய்து வைத்து வேண்டுகிறார்கள்.*

*#தீட்சை_முத்திரைகள்*

⭕*பெருமாள் பக்தர்களுக்கு தீட்சை தரும்போது, கைகளில் சங்கு, சக்கர முத்திரைகள் பதிப்பர். பெரியநம்பி, ராமானுஜருக்கு தீட்சை கொடுக்க பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளது. 1935ல் கோயில் திருப்பணி நடந்தபோது, இம்முத்திரைகள் இங்கு கிடைத்தது. இந்த சங்கு, சக்கர தரிசனம் கிடைப்பது மிக அபூர்வம்.*

*#இரண்டு_தேர்கள்*

⭕*ஆனியில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாளில் பெரிய பெருமாள் உற்சவம் நடக்கும். அன்று ராமர், புஷ்பக விமானம் போல அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப்பெருமாள் மற்றொரு தேரிலும் உலா செல்வர். இவ்வாறு இங்கு ஒரே விழாவில் இரண்டு தேர்கள் ஓடும்.*

*வெண்ணிற ஆடை ராமானுஜர்*

*பொதுவாக, காவி வஸ்திரம் அணிந்து காட்சி தரும் ராமானுஜரை, இத்தலத்தில் வெண்ணிற வஸ்திரத்துடன் கிரகஸ்தர் (குடும்பஸ்தர்) கோலத்தில் தரிசிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் முன்பு இங்கு தீட்சை பெற்றுக் கொண்டார். இதன் காரணமாக இங்கு வெண்ணிற ஆடையுடன் காட்சியளிக்கிறார். மூலவர், உற்சவர் இருவருக்கும் வெள்ளை ஆடையுடனேயே அலங்காரம் செய்கின்றனர். ராமானுஜரின் இந்த தரிசனம் விசேஷமானது.*

*#தல_வரலாறு*

⭕*சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தங்கி, அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மகரிஷியின் வேண்டுதலுக்காக அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் கல்யாண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். இதன் அடிப்படையில் இங்கு புஷ்பக விமானத்துடன் கோதண்டராமர் கோயில் எழுப்பப்பட்டது.*

*#சிறப்பம்சம்*

*#அதிசயத்தின்_அடிப்படையில்*

⭕*ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்.*

*#அமைவிடம்*

*இருப்பிடம் செங்கல்பட்டில் இருந்து 23 கி.மீ., மேல்மருவத்தூரில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் மதுராந்தகம் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே கோயில் உள்ளது.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*செங்கல்பட்டு*

*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை*

*தங்கும் வசதி*

*காஞ்சிபுரம்*

*வாழ்க வளமுடன்*

*வாழ்க வையகம்*

*🙏 ஶ்ரீ ராம ஜெயம் 🌷*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...