Thursday, January 5, 2023

#கோயில்_என்றாலே #ஸ்ரீவைஷ்ணவர்களுக்குஸ்ரீரங்கம்தான்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

                 #கோயில்_என்றாலே #ஸ்ரீவைஷ்ணவர்களுக்குஸ்ரீரங்கம்தான்' என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது #திருவரங்கத்_திருத்தலம்

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

#குடதிசைமுடியை_வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ #என்செய்கேனுலகத்தீரே."

⭕எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர்,

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

⭕இந்த ஆலயத்தின்
 #ஏழுசுற்றுகளையும்_ஏழுலோகங்களாகச்சொல்வார்கள். அவற்றில், 

🔯திருமாடங்கள் சூழ்ந்த சுற்று     
                                           `#பூலோகம்என்றும்,  

🔯திரிவிக்ரம சோழன் சுற்று `#புவர்லோகம்என்றும்_அகளங்கன்_சுற்றுஎனும் 

🔯கிளிச்சோழன் சுற்று `#ஸுவர்லோகம்’ என்றும்,  

🔯திருமங்கை ஆழ்வார் சுற்று `         
                               ]#மஹர்லோகம்_என்றும்,  

🔯குலசேகர ஆழ்வார் சுற்று 
                            `    #ஜநோலோகம்_என்றும், 

🔯 ராஜமகேந்திரச் சோழன் சுற்று   
                             `      #தபோலோகம்_என்றும்,  

🔯 ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `    #சத்யலோகம்என்றும் போற்றப்படுகிறது. 

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🌺 மேலும், இங்குள்ள #ஒன்பதுதீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ]#ஒன்பது_நதிகளின்அம்சமாக_அடங்கியுள்ளன என்கிறார்கள். 

🍒 சந்திர புஷ்கரணி #கங்கையாகவும், 

🍒வில்வ தீர்த்தம் #யமுனையாகவும், 

🍒 சம்பு தீர்த்தம் #சரஸ்வதியாகவும், 

🍒பகுள தீர்த்தம் #கோதவரியாகவும்

🍒, பலாச தீர்த்தம் #கிருஷ்ணாவாகவும், 

🍒அசுவ தீர்த்தம் #நர்மதாவாகவும்,  

🍒ஆம்ர தீர்த்தம் #துங்கபத்ராவாகவும்,

🍒 கதம்ப தீர்த்தம் #கண்டகி_நதியாகவும், 

🍒புன்னாக தீர்த்தம் #காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன. 

#விண்ணகத்து_லோகங்களும்_மண்ணகத்து_நதிகளும்_ஒருசேர_அமைந்திருக்கும்புண்ணியத்தலம்_திருவரங்கம்.

🙏🙏🙏'இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த  
#அரங்கமாநகரத்து_ஆலயம்_போதும்' என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயம்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...