Sunday, January 29, 2023

யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி*

*யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி* 🦜🙏🙏🙏💕🦜
🕉திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில்,சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர்.

🕉இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர்.சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

🕉ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த நிலையில்,நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் திருமால் காட்சி தருகிறார்.

🕉பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.

🕉சூரிய பகவான் திருமால் அம்சமாக,சூரிய நாராயணர் என்று போற்றப்படுகிறார்.

🏵️கருவறையை வலம் வரும் போது தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்தியபடி,நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
🏵️பின்னிரு கரங்களில் மான்,மழு ஏந்தி,முன்னிரு கரங்களில் வீணையை மீட்டி,அந்த நாதத்தில் மெய் மறந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
🏵️இவர் திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.
🏵️லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலும் இதே போன்ற வீணா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

🕉குருப் பெயர்ச்சியையொட்டி,இந்தத் தலத்துக்கு வந்து விஷமங்களேஸ்வரரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் மனதாரப் பிரார்த்தனை செய்தால்,"குருவருளும் திருவருளும்" கிடைத்து யோகத்துடனும் ஞானத்துடனும் திகழலாம்.

🕉கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

🕉சிவபெருமான்,
வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடது கையால் பார்வதி தேவியை அணைத்தபடி அபூர்வமாக காட்சியளிக்கிறார்.இங்கே வந்து இந்த மூர்த்தியை வணங்கினால்,கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

🕉ஈசன் தனது இடது பாதத்தின் சுண்டு விரலை தேவியின் வலது பாதத்தின் மீது வைத்திருப்பது போன்றுநுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது,இச்சிலை.

🕉இந்த உமா ஆலிங்கன மூர்த்தியை வழிபட மணப்பேறு,மகப்பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

🕉தொடர்ந்து மேற்கே,தனிச் சந்நதியில் லட்சுமி நாராயணர்,கருவறையின் வட கோஷ்டத்தில் பிரம்மா,சரஸ்வதி,துர்க்கை சந்நதிகள் உள்ளன.அனைத்துச் சிற்பங்களும் கலைநயம் ததும்ப காட்சியளிக்கின்றன.

🕉ஆலயத்திற்கு வெளியே நாக தோஷங்களை நீக்கும் பாம்புப் புற்று காணப்படுகிறது.

ௐ நமசிவாய.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...