Sunday, January 29, 2023

உடல் குறைபாட்டைப் போக்கும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில்...!

உடல் குறைபாட்டைப் போக்கும் ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில்...!

உடல் குறைபாட்டைப் போக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆதிகுடியில் அமைந்துள்ள பிரேமாம்பிகை அம்மன் உடனுறை அங்குரேசுவரர் சுவாமி திருக்கோயில்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத் திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந் திருக்கும் இங்கு சிறப்பு வாய்ந்த விமல லிங்கம் உள்ளது.

இத்திருக் கோயிலின் எதிர்த் திசையில் மயானமும் அமைந் திருப்பது  தனிச் சிறப்புக் குரியது. 

இங்குள்ள வாய்க் காலுக்கு கமல காசித் தீர்த்தம் என்ற பெயர் உண்டு. இதனால் காசிக்கு இணையான தலமாக ஆதிகுடி அங்குரேசுவரர் திருக்கோயில் போற்றப் படுகிறது. மேலும் நீத்தார் கடன் செய்ய உகந்த இடம் என்றும் கூறப்படு கிறது.

நவக்கிரக நாயகர்களில் ஆயுள் காரராகப் போற்றப் படுவர் சனி பகவான்.  

இவர் சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர்.  ஒரு சந்தர்ப்  பத்தில் எம மூர்த்தியின் தண்டத்தால் சனி பகவான் கால் ஊனம் அடைந்தார்.

இந்த ஊனத்தைப் போக்க           பல திருக் கோயில்களில் வழிபட்டார். புனிதத் தீர்த்தங்களில் சனி பகவான் நீராடினார். 

கடைசியாக ஆதிகுடி திருக் கோயிலை அடைந்தார். இக்கோயிலில் பல யுகங்கள் தவம் புரிந்து, இங்கு எழுந்தருளிய அங்குரேசு வரரின் அருளைப் பெற்றார் சனி பகவான். 

அதன் விளைவாக அவரது குறை நீங்கியதாக அங்குரேசுவரர் திருக்கோயில் தல புராணம் எடுத்துரைக் கிறது.

இத்திருக் கோயிலின் மகா மண்டபத்தில் நுழைந்தால், எதிரில் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் பிரேமாம்பிகை அம்மன் காட்சியளித்து வருகிறார்.

தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டு தல்களை நிறைவேற்றித் தரும் சாந்த சொரூபியாக அம்மன் எழுந்தருளி யுள்ளார். மகா மண்டபத்துக்குள் நுழைந்தால் ஒரே நேரத்தில் இறைவன், இறைவியை வழிபடலாம். 

விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந் திருந்தால், பக்கவாதம் போன்ற  நோயால் பாதிக்கப் பட்டிருந்தால், இத்திருக் கோயிலில் காட்சி யளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சத்திரம் பேருந்து நிலையம், திரு வானைக்கா, நெ.1.டோல் கேட், வாளாடி, மாந்துறை வழியாக லால்குடி வந்து, லால்குடி யிலிருந்து         சுமார் 5 கி.மீ. தொலைவில் ஆதிகுடி அமைந்துள்ளது

No comments:

Post a Comment

Followers

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான #திருஓணகாந்தன்தளி[237] வரலாறு மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் உற்சவர்...