🏵️கேட்ட வரம் தரும் அகோரமூர்த்தி🏵️
🔱சிவபெருமானுக்கு ஈசானம்,சத்யோஜாதம்,தத்புருஷம்,வாமதேவம்,அகோரம் என்ற ஐந்து முகங்கள் உள்ளன.இந்த முகங்களில் ஒன்றான அகோர முகம் தாங்கியிருப்பவர் அகோர மூர்த்தி.
🔱இவர் மயிலாடுதுறை மாவட்டடம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
🔥முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன்,சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் கடும் தவம் புரிந்தான்.
🔥அவனுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான்,அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என கேட்டார்.
🔥அப்போது அந்த அசுரன்,சிவபெருமானின் சூலாயுதத்தை கேட்டான்.அதைக் கேட்டதும் சிவபெருமான்,கொஞ்சம் கூட தாமதிக்கமல் உடனடியாக அந்த சூலாயுதத்தை அசுரனிடம் தந்து அருளுகிறார்.
🔥சூலாயுதத்தை பெற்ற அசுரன் தேவர்களையும்,பொதுமக்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான்.அசுரனுடைய துன்பத்தை பொறுக்க முடியாத தேவர்கள்,சிவபெருமானிடம் முறையிடுகின்றனர்.
🔥இதனையடுத்து சிவபெருமான்,நந்தி தேவரை அழைத்து இது சம்பந்தமாக விசாரித்து வருமாறு அனுப்பினார்.
🔥அசுரனிடம் சென்ற நந்தி தேவர்,தேவர்களையும் பொதுமக்களையும் துன்புறுத்துவது குறித்து கேட்டார்.அதற்கு அந்த அசுரன் கோபம் கொண்டு தனது சூலாயுதத்தால் நந்தி தேவரின் ஒருபக்க கொம்பை முறித்ததுடன்,உடலில் பல்வேறு இடங்களிலும் குத்தி காயப்படுத்தினான்.
🔥அந்த காயத்தோடு சிவபெருமானிடம் நந்தி தேவர் செல்கிறார்.ரத்தத்தோடு தன் முன் நின்ற நந்திதேவரை பார்த்த சிவபெருமான் சினம் கொண்டு தனது ஐந்தாவது முகத்தில் இருந்து தீப் பிழம்பாக வெடித்து அகோர மூர்த்தியாக தோன்றுகிறார்.
🔥சிவபெருமானுடைய கோபத்தைக் கண்ட அசுரன்,ஈசனிடம் சரணாகதி அடைகிறான்.
🔥சினம் குறைந்த அகோரமூர்த்தி,அசுரனை மன்னித்து அருளுகிறார்.அப்போது அசுரன் அவரிடம்,தங்களை வந்து வணங்குபவர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து அருள்பாலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
🔥இதனை ஏற்ற அவர் அழகிய முகம் கொண்ட அகோரமூர்த்தி சுவாமியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.
🔱அவருடைய திருவுருவத்தில் கபாலம்,மண்டை ஓடு மாலை,ஈட்டி, எண்ணிலடங்கா விஷ ஜந்துக்கள் உள்ளன.
🔱அதோடு இங்கே அஷ்ட(எட்டு) பைரவர்கள் இருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.இவர்களை வணங்கினால் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்பது நம்பிக்கை யாகும்.
🔱இந்தக் கோவிலில் அசுரனால் குத்துப்பட்ட நந்தி தேவர்,சுவேதாரண்யேஸ்வரர் சன்னிதி முன்பு எழுந்தருளியிருக்கிறார்.மிகவும் விசேஷ சக்தி கொண்ட இவரை பிரதோஷ தினங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என சுவேதாரண்யேஸ்வரர் புராணத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.
🔱அசுரனால் குத்துப்பட்ட நந்திக்கு,சிவபெருமான் அனுக்கிரகம் செய்ததால்,அகோரமூர்த்தி சன்னிதியில் காயம் இல்லாத நந்தி பகவான் அவரது காலடியில் இருப்பதை காணலாம்.
🔱அதே போல் அசுரனும் சரணாகதி ஆகி காலடியில் இருப்பதையும் காணலாம்.அகோர மூர்த்தி சுவாமி மாசி மாதம் பூர நட்சத்திரத்தன்று இரவு தோன்றியதால்,ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஐந்தாம் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.
🔱வாரம் தோறும் இவருக்கு ஞாயிற்றுக் கிழமை இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவதாக ஐதீகம்.
🔱மேலும் சிவனுக்கு உரிய மாதமான கார்த்திகை மாதத்தில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
🙏🏵️ௐ நமசிவாய🏵️🙏
No comments:
Post a Comment