சிவன் சொத்து குலநாசம் என்பது உண்மையா...?
எத்தனையோ அருளார்கள் இதற்க்கு விளக்கம் அளித்தும் இக்கேள்வி இன்னும் உலாவி கொண்டே உள்ளது.
இதில் ஒரு சிலர் இன்னும் இந்த ஒரு வரியை தவறாக புரிந்து கொண்டு நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர்.
ஒரு சிலர் புரிதல் இப்படி சிவன் கோவிலில் இருந்து மட்டும் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் தவறுதலாகக் கொண்டுவரக் கூடாது என்று பொருள் கொள்கின்றனர்.
அப்படியென்றால் மற்ற இடங்களில் இருந்து தவறாகக் கொண்டுவரலாமா ? என்ற கேள்வி எழுகிறது.
சிவன் இல்லாத இடம் எது ? அனைத்தும் சிவமயம் என்று அறிவோம்.
இன்னும் இப்பழமொழிக்கு பல விளக்கங்கள் கூறப்படுகிறது
உண்மையில் ஒருவனது சொத்து அவனது அன்பர்கள் தான்.. அதுபோல் சிவனின் சொத்து அவன் அடியார்கள்.. அவன் அடியார்களுக்கு ஒரு பாவம் செய்தால் செய்தவர் குலத்தையே அழித்துவிடுவான் என்பது ஒன்று..
சிவன் சொத்து என்பது உலகினை குறிக்கும் உலகினை செய்தவன் என்பதால் அதாவது நீர் நிலம் காற்று ஆகாயம் போன்றன அந்த உலகினுக்கு தீங்கு செய்தால் நமது குலமே நாசமாகும்..
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது.
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் தான் என்ன?
இப்ப பழமொழிக்கு இதிகாசத்தில் ஒரு நிகழ்வு மேற்கோளாக சொல்லப்படுகிறது..
எமலோகத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த எமதர்மர், தனது தூதர்களை அழைத்தார். ‘இந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட மனிதனின் இறுதிகணம் இன்று முடியப் போகிறது. நீங்கள் சென்று அவனை அழைத்து வாருங்கள். ஆனால் இம்முறை உங்களை நான் சோதிக்க போகிறேன். நீங்கள் செல்லும் இடத்தில் ஒரே மாதிரியாக இரண்டு பேர் இருப்பார்கள். இதில் ஒருவன் கலியுகம் போற்றவும், மற்றொருவன் கலியுகம் தூற்றவும் வாழ்ந்துக் கொண்டிருப்பான். எனக்கு கெடுதல் புரிபவனின் உயிர் தான் வேண்டும்’ என்றார்.
எமதர்மரின் சொல்படி தூதர்களும் பூலோகம் வந்தனர். எமதர்மர் குறிப்பிட்டு சொன்ன அந்த இருவரையும் கண்காணித்தார்கள். ஒருவன் தினமும் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு ஆலய பணிகளில் ஈடுபட்டு பக்தியுடன் இருந்தான். மற்றொருவன் கள்ளம், கபடு, திருடு, பொய் பித்தலாட்டம் என்று இருக்கும் அத்தனை தீயவழிகளையும் தன் குணமாக்கி வாழ்ந்து வந்தான்
அவனது தோற்றமும், வாழும் முறைகளும் அருகிலிருந்த மக்களை வெறுப்படைய செய்தது. தூதர்கள் இருவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து குறிப்பிட்ட நேரம் வந்ததும் சிவாலயத்துக்குள் பணியில் இருந்தவனை பாசக்கயிறு போட்டு இழுத்து சொர்க்கவாசல் வழியைத் தவிர்த்து நரகத்துக்குள் இழுத்துச் சென்றனர்.
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த எமதர்மர் ‘என்ன செய்கிறீர்கள் தூதர்களே? நல்லவனை மாற்றி அழைத்து வந்ததோடு அவனை நரகலோலத்துக்குள் பிரவேசிக்க செய்துவிட்டீர்களே?’ என்று கோபம் கொண்டார்.
இல்லை எமதர்மரே.. இவன் சிவாலயங்களில் சேவை செய்வதாக சொல்லி அங்கிருக்கும் பொருள்களை யாரும் அறியாமல் களவாடி சமூகத்தில் நல்ல முறையில் நல்ல பெயர் பெற்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். கேட்பவர்களுக்கு உதவி செய்தாலும் இறைவனுக்குரியதை எடுத்து அனுபவித்து அதையே உதவி என்று பொய் முகம் காட்டி மக்களை ஏமாற்றி இறைவனையும் ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.
இன்னொருவன் மக்களிடம் கொள்ளையடிக்கிறான். அவனுக்கு தான் செய்வது தவறு என்று தெரியவில்லை. ஆனால் இவனுக்கு நன்மை எது தீமை எது என அனைத்தும் தெரிந்திருக்கிறது. இருந்தும் இவன் படைத்த இறைவனிடமே பசுத் தோல் போர்த்திய புலியாய் நல்லவனாய நடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் இவனை அழைத்து வந்தோம். இவனுடைய குடும்பத்தினரும் இவனது வம்சமும் இனி நல்லதை நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்க்கையில் கவலையும், அச்சமும், தரித்தரமும் சூழவே அவர்கள் இறுதிக் காலம் வரை கழிக்க வேண்டும். மரணத்தைக் கூட அகால மரணமாக தான் பெறமுடியும்” என்றனர்.
புன்னகைத்த எமதர்மர், என்னுடைய தூதர்கள் எப்போதும் தரும வழியிலேயே செல்வார்கள் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றார். இதனால் தான் சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறோம்.
No comments:
Post a Comment