Sunday, April 2, 2023

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை யில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது

.சோமவார பிரதோஷம்:
*************************************************
சிவ ஆலயத்திற்கு செல்பவர்கள் சோம வார நாளில் சென்று வழிபடுவார்கள். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை யில் வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோம வார பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷ ங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெற லாம். சந்திர தோஷத்தால் பாதிக்கப் பட்ட வர்கள் இன்று சிவ தரிசனம் செய்யலாம்.

சோமன் என்றால் சிவன், திங்களை முடி மேல் சூடிய சிவனுக்கு சோமவாரம் எனப்ப டும் திங்கட்கிழமை உகந்த தினம். தீராத வினை யெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும்.

மாலையில் பிரதோஷ நேரத்தில் சிவனை யும் நந்தியையும் வழிபட வேண்டும். நம்பி க்கை யோடு நமசிவாய எனும் ஐந்தெழுத் து மந்திரத்தை உளமார ஜபித்து பிரதோ ஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நட க்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவ னை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

தோஷம் நீக்கும் பிரதோஷ மகிமை:
***************************************
பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளய பிரதோஷம் என இரு பது வகையான பிரதோஷங்கள் உள்ளதா க புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். 

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக் கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவ தாண்டவ தரிசனம்:
**************************
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடு ங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன் னுள் அடக்கிக் கொள்வதாக ஐதீகம். 

பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில் அயர்ச்சியில் பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தா ண்டவம் ஆடியது திரயோதசி நாளில்,  அந்தி சாயும் நேரத்தில். இந்தக் காலத்தை த்தான் பிரதோஷ காலம் என்கிறோம்.

பிரதோஷ கால நடனம்:
*************************
பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். 14 ஆண்டுகள் பிரதோஷநாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்க ள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களா கிவிடுவார்கள். 

பிரதோஷ நேரத்தில் சிவன்ஆடும் ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டு களிப்பதாக புராணங்களில் கூறப் பட்டுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடி யதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்தம் மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்:
*****************************************
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இரு ப்பது தான் நந்தி. சிவனை பார்க்க செல்ப வர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்களுடைய குறைகளையும் வேண்டுத ல் களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யு ம். நந்தியின் காதில் சொல்லும் நடைமு றை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்தி க்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பது தான் இதன் கூடுத ல் சிறப்பு

சோமவார பிரதோஷ சிறப்பு:
*******************************
சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தின பிரதோஷ ப் பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக் கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொ ண்டிருக்க வேண்டும். 

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகிய வற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனை யும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும். பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

வழிபாடு செயதால் தடைகள் நீங்கும்:
****************************************
அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தா மரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பா ல் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். 

கொண்டக் கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நை வேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடு ப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற் றம் கிடைக்கும்.

நந்தி வழிபாடு:
*****************
பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். நந்தியம்பெருமானுக்கு அருக ம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.

அபிஷேக பொருட்கள்:
************************
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக் கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 
தயிர் - பல வளமும் உண்டாகும், 
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்.                        பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 
நெய் - முக்தி பேறு கிட்டும். 
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்.                 சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.                    எண்ணெய் - சுகவாழ்வு, 
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.

சிவ தரிசனம்:
***************
பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் என்பர். பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலய த்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு. 

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாரா யண த்தையும், இரண்டாம் சுற்றில் செய் யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசை யையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தி ல் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ் கந்த மூர்த்தியாக தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிப ட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

குறைகள் குணமாகும்:
*************************
பிரதோஷ தினமான இன்று சிவபெருமா னை வேண்டி நடைபெறும் ஹோமங்களி லும் அபிஷேக ஆராதனைக ளிலும் பங்கே ற்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங் கும், அறிவு வளரும், நினைவாற்றல் பெரு கும், சந்திர கிரக தோஷங்கள் நீங்கும், 

சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும், வேலை கிடைக் காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும், வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும், மேலும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

" என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே..."  

சிவவாக்கியர்....

ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...