Tuesday, April 4, 2023

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம் #சத்தியமங்கலம்

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான 
ஈரோடு மாவட்டம் #சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற அருள்மிகு #பண்ணாரி_மாரியம்மன்  திருக்கோவில் குண்டம் திருவிழா-2023. 
குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.🙏

தமிழ்நாடு கர்நாடகா எல்லைப் பகுதியில் ஒரு அழகான வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோயில். மிகவும் சக்தி வாய்ந்த  பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு கர்நாடகா ஆந்திர மற்றும் கேரளாவில் இருந்து பல பக்தர்கள் ஆவலோடு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவின் போது 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் இறங்கும் திருவிழா என்பது தீமிதி திருவிழா என்பது ஆகும். தமிழகத்தில் எங்கும் இல்லாத விசேஷமாக இங்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறும் தீமிதி திருவிழா இதுவாகும்.

குழந்தைகள் பெரியவர்கள் என பலதரப்பு மக்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்களை வியக்க வைக்கும் விதமாக கால்நடைகளும் இந்த தீமிதி திருவிழாவில் பங்கு பெறுவதுண்டு. இந்த கோவிலில் குவித்து வைத்திருக்கும் புத்துமண்ணை பிரசாதமாக நெற்றியில் வைத்துக் கொண்டு வீட்டிற்கும் எடுத்து சென்று நோய் வாய் பட்டவர்கள் உடல்நல குறைவால் வாடுபவர்களுக்கு வைத்து விட்டால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. 

தல வரலாறு:

பண்ணாரியில் உள்ள வனப்பகுதியில் சுயம்புவாக அவதரித்த அம்மன் என்பதால் பண்ணாரி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். கேரளாவில் உள்ள மன்னார்காடு என்ற பகுதியில் மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அப்போது அங்கே இருக்கும் மக்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை ஊர் ஊராக சென்று விற்று வந்தனர். அப்படி ஒரு முறை விவசாய பொருட்களை விற்க கிளம்பிய மக்களுக்கு வழிகாட்ட அந்த ஊர் தலைவன் இல்லாததால். அப்போது அந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள அம்மனை வேண்டி எங்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை நீதான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினர்.

அப்பொழுது அங்கு ஒழித்த குரல் கவலைப்படாதீர்கள், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நான் வழி காட்டுகிறேன் என்று அம்மனின் குரல் ஒலித்தது. இப்படி அம்மனைப் பின்பற்றி தங்களது விவசாய இடுப்போடுகளுடன் கிளம்பினார் மக்கள். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியை கடக்கின்றன அப்போது அங்கே ஒரு வேங்கை மரத்தை பார்க்கின்றன இந்த வேங்கை மர நிழலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்த நாள் மக்கள்.அப்போது அம்மனும் அந்த வேங்கை மரத்தின் அடியில் அமர்ந்தார்.

அப்போது தனது வேலையை முடித்துக் கொண்டு ஊர் தலைவன் மக்களை வழிநடத்த அங்கு வந்தார். அப்போது மேற்கொண்டு செல்லலாம் என அம்மனிடம் உத்தரவு கேட்க அம்மனோ இனி உங்களை வழிநடத்த உங்கள் ஊர் தலைவன் இருக்கிறார் நான் இங்கேயே இருக்கிறார் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே அந்த அடர்ந்த வனப்பகுதியில் குடியிருந்தார் அம்மன். 
சில ஆண்டுகள் கழித்து அந்த வனப்பகுதியில் ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட மாடு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்து கொண்டிருந்ததை வழக்கமாக வைத்திருந்தது.

பொதுமக்கள் ஏன் அந்த இடத்தில் பசு தினமும் பால் சுரக்கிறது அந்த இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணி அந்த இடத்தை தோண்டி பார்க்கும்போது சுயம்புவாக வெளிப்பட்ட அம்மன் இன்று வரை அந்த இடத்தில் அருள் பாவித்து வருகிறார் மன்னார்காடு என்ற இடத்தில் இருந்து வந்த அம்மன் என்பதால் மன்னாரி அம்மன் என்று பெயர் பெற்று காலப்போக்கில் பண்ணாரி அம்மன் ஆக அந்தப் பகுதியில் கோவில் கொண்டுள்ளார். ஈரோடு, சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்று கூறப்படுகிறது.

#மற்றொரு_வரலாறு:

பண்ணாரி மாரியம்மனது வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.அக்காலத்தில் வண்ணார் சமுதாயத்தைச் சார்ந்த கணவன் மனைவியும் சலவைத் துணி துவைப்பதற்காக ஒரு பெரிய மலை கீழ் அமைந்து இருந்த ஆற்றில் துணி சலவை செய்ய எடுத்து சென்றனர்.அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.பின் சலவை துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.பின் அந்தக் கணவனோ தான் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை கொண்டு நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது.பின் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை.பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் கவுண்டரிடம் முறையிட்டுள்ளனர்.பின் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையே தூக்க முடியவில்லை.பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர்.அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது.(அதை இன்றளவும் நாம் பூசையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்).அந்த தாழியின் உள்ளையே இருந்த குழந்தை காலையில் சென்று பார்க்கும் பொழுது பெண் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளி இருந்தது.அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு நாட்டு வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள்.அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது.இது இன்றளவும் வண்ணார் சமுதாய கடவுளாக, வண்ணார் பெண்ணாக காணப்படுகிறது.

பண்ணாரி தாயே 🙏
ஓம் சக்தி 🙏

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...