Wednesday, May 10, 2023

“ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரன் உடைய நாயனார்” என்று அழைக்கபடுகிறார் .

மனக்கவலைகள் தீர்க்கும் மதுராந்தக சோளீஸ்வரர்.
இக்கோயில் முதலில் செங்கற்றிளியாய் எழுந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூற்று. இக்கோயிலின் காலமும், தொன்மையும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனினும் இக்கோயிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக அறியப்படுகிறது.

முதன்முதலில் லிங்கம் மட்டும் நிறுவி, கோயில் கட்டபட்டது. இதனை நிறுவியவர் மதுராங்க சோழன் என்றும், அவன் பெயரிலேயே இறைவன்
“ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரன் உடைய நாயனார்” என்று அழைக்கபடுகிறார் .

பாண்டியர்கள் சோழர்களும் திருப்பணி செய்து, பூஜைக்கும், விழாக்களுக்கும் நிலங்களை அளித்துப் பல நிவந்தங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். இதற்க்குச் சான்றாக அக்கோயில் மண்டபத்தில் ஒரு பக்கம் மீன் சின்னமும், எதிரே புலி சின்னமும் அமைந்துள்ளது.

பொதுவாக சிவன் கோயில்கள் ராஜகோபுரம் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் தெற்குப் பகுதியில் வாசல் உள்ளது. 

இதற்க்கு காரணம் இங்குள்ள அம்பாளுக்கு நெற்றியில் கண் அமைந்திருப்பதால் என்கிறார்கள். கோவிலினுள் நுழைந்தவுடன் அமைந்துள்ளது சிறு ஜன்னல் வழியே அம்பாளைத் தரிசிக்கலாம்.

ஒரு திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலில் தெற்கில்,முதல் கோஷ்டமூர்த்தியாக ஸ்ரீநிறுத்த கணபதி, அடுத்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, அவருடைய பக்கவாட்டில் ஸ்ரீ ஆஞ்சிநேயரும், ஒரு யாளியும் அமைந்துள்ளது. ஸ்ரீ விநாயகர் கையில் மாம்பழத்தைத் தன் தும்பிக்கையால் அணைத்தவாறு உள்ள காட்சி அற்புதம்.!

இவரை அடுத்து, ஸ்ரீ ஆறுமுகம் சந்நிதி ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் சிறப்பு அம்சம் இவரே! ஒரு கையில்  வில்லும், மறுகையில் அம்பும் கொண்டுள்ளார். மற்றிரு கையில் சங்குசக்கரம் காணப்படுகிறன. 

இதுபோல் சங்கு சக்கரத்துடன் கூடிய முருகன் சன்னதி கும்பகோணதிர்க்கு அருகிலுள்ள அழபுதூர் என்ற அரசிற்கரை புதூர்  என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் மட்டும் காணப்படுகிறது. இந்த முருகன் ஒரு கையில் சேவல் கொடியை வைத்துக்கொண்டிருக்கிறார்.

இக்கோவில் கி.பி 121௦-ல் கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள் அமைக்கப்படவில்லை என்றாலும், இக்கோயிலைச் சுற்றி வரும்போது ஒன்பது குழிகளுடன் கூடிய ஒரு சதுரக் கல் காணப்படுகிறது.

இது ஒருக்கால் ஆராதனைக்குரியதாய் இருக்கலாம். திருச்சி மணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி என்ற தலத்தில் இதேபோல் அமைப்பு உள்ளது. அது நவகிரகங்களாய்த் தொழப்படுகிறது. அதனால் இத்தலமும் ஒரு விசேஷப் பரிகாரத்தலமாக விளங்கியிருக்கக் கூடும்.

ஸ்ரீ மதுராந்தக சோளீஸ்வரர், பெரிய திருமேனியுடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவருக்கு எதிராக ஜன்னல் பொருத்தப்பட்டுள்ளது. அம்பாள் பெரியநாயகி, நெற்றிக் கண்ணுடன் விளங்குபவள். தெற்குப் பார்த்து நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள்.

இங்குள்ள அம்பாள் மிகவும் பெருமையுடையவள் ‘முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்பார் அபிராமி பட்டார். .

பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது தொழுதூர் என்னும் சிற்றூர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டத்தில் இது உள்ளது. ஊரின் நடுவே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சுமார் 2 கி.மீ பயணித்தால் இத்தலத்தை அடையலாம்.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...