எந்த மாதத்தில் எந்த பைரவரை வணங்கினால் சிறப்பு?
💥 பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.
💥 காலத்தின் கடவுளான காலபைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.
💥 தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார்.
💥 பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. ஆதலால் நாய்களை பைரவர் என்றும் சொல்கின்றார்கள். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், காலபைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
💥 செல்வ செழிப்புடன் வாழவும், எதிரிகளின் தொல்லை விலகவும் மற்றும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதும் பைரவர் வழிபாடுதான்.
💥 பைரவருக்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் தனித்தன்மை வாய்ந்த பலன்கள் கிடைக்கும்.
எந்த மாதத்தில் எந்த பைரவரை வணங்கினால் சிறப்பு?
💥 சித்திரை - சண்ட பைரவர்
💥 வைகாசி - ருரு பைரவர்
💥 ஆனி - உன்மத்த பைரவர்
💥 ஆடி - கபால பைரவர்
💥 ஆவணி - சொர்ணாகர்ஷண பைரவர்
💥 புரட்டாசி - வடுக பைரவர்
💥 ஐப்பசி - சேத்ரபால பைரவர்
💥 கார்த்திகை - துவஷ்டா பீஷண பைரவர்
💥 மார்கழி - அசிதாங்க பைரவர்
💥 தை - குரோதன பைரவர்
💥 மாசி - ஸம்ஹார பைரவர்
💥 பங்குனி - சட்டநாத பைரவர்
பரிகாரம் :
💥 தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும்.
💥 சனி மற்றும் ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது நல்லது.
💥 குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
No comments:
Post a Comment