Thursday, May 11, 2023

#திருப்பாதிரிப்புலியூர் #பாடலீஸ்வரர் திருவருளால் கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறிய #அப்பர்_பெருமான்....

#திருப்பாதிரிப்புலியூர் #பாடலீஸ்வரர் திருவருளால் கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறிய 
#அப்பர்_பெருமான்....
(திருநாவுக்கரசர்) ஐதிக விழா இன்று:
 

"சொற்றுணை வேதியன்
  சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
  பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
  கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
  நமச்சி வாயவே"

#கடலூர் #திருப்பாதிரிப்புலியூர்
 அருள்மிகு  பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரர் திருக்கோவில் சித்திரை மாத அனுஷம்நட்சத்திரம் #அப்பர்பெருமான்
(7-5-2023) கரையேறவிட்டகுப்பம் அப்பர் பெருமான் கரையேறிய ஐதீக உற்சவம் இன்று  காலை சிறப்பாக நடைபெற்றது 🙏🙏🙏

புராண வரலாறு:

திருநாவுக்கரசர் வாழ்வும் வாக்கும்
கல்லில் கட்டி கடலில் விட்டது
பாடலிபுத்திரத்தில் பல்லவராஜன் சமணர்களின் வேண்டுகோளின்படி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லாேடு கட்டி சமுத்திரத்திலே விடச் செய்தனர். அப்போது அவர் அருளிய பதிகம் ” சொற்றுணை வேதியன் ஜோதிவானவன் “
சிவது திருவருளையும் பஞ்சாட்சரப் பெருமையையும் ஒருங்கே உணர்த்துவது இப்பதிகம் ,இப்பதிக வரலாற்றை திருநாவுக்கரசரின் உள்ளப்பாங்கை நன்கு புரிந்து கொண்டு பாடிய சேக்கிழார் சுவாமிகள் அரிய உண்மை ஒன்றை கூறியிருக்கிறார். ” ஒப்படும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண்டமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து துதிப்பார் “
சமணர்கள் அப்பர்அடிகளை கல்லுடன் கட்டி கடலில் இட்டதும்கல்லுடன் சேர்ந்த அப்பர்சுவாமிகள் ஆழ் கடல் புக்கார் அதாவது கல்லுடன் கடலின் அடிப்பாகத்தை அடைந்து விட்டார் அப்படி அமிழ்ந்த நிலையில் முன்பு மூன்று தடவை சிவபெருமான் காத்தருளியது போல இப்போது காப்பாற்றாது விட்டாலும் விடக்கூடும்.

அப்படி சிவன் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை சிவபெருமானை திருவைந்தெழுத்தால் துதிப்பாேம் என்ற மனப் பான்மையில் இப்பதிகத்தை பாடஆரம்பித்தார். ஆனால் முதலாவது பாடலின் கல்துணைப் பூட்டி ஓர் கடலின் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே என்றுள்ள பகுதி அப்பரின் மனநிலை மாறி நம்பிக்கை ஏற்பட்டதை காட்டுகின்றது. கல்லில் கட்டிய அப்பர் அடிகள் ஆழ் கடலாயிருந்தும் மிதக்க தொடங்கினா்.
இப்பதிகத்துள்ள ஒவ்வொரு பாடலும் சிறந்த விளக்க உரைக்குரிய செறிவானபகுதிகளைக் கொண்டது
நாவினுக்கு அருங்கலம், நடுக்கத்தை கெடுப்பது, நங்களுக்கு அருங்கலம் போன்ற தொடர்கள் சைவ மக்களுக்கு தமிழ் திருமுறைகளும் கிடைத்த விலை மதித்தற்கரிய மணிக்கல்கள் என்பன.
கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டார் என அவ நம்பிக்கை உண்டான வேளையும் நாம் திருமுறை பாராயணம் செய்யும் முயற்சித்தால் தீமை அகலும் இன்பம் பெருகும் என்ற நம்பிக்கை ஊட்டும் முகத்தான் அமைந்ததே இப்பதிகம்
திருச்சிற்றம்பலம் 🙏

🙇🙇🙇

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...