அருள்மிகு கோணேஸ்வரா்.
திருக்குடவாயில்
(குடவாசல்).
கும்பகோணம் திருவாரூா்ச் சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில்
திருவாரூாிலிருந்து 16 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
திருக்குடவாயில், குடவாயில், குடவாயிற்கோட்டம், கதலிவனம், கோணத்தானம், வன்மீகாசலம் புத்தாற்றின் தென்பகுதியில் இக்கோயில் உள்ளது
நழைவு வாயில்
முகப்பில் பஞ்சமூா்த்திகள் சுதை சிற்பங்கள் காணப்படுகின்றன.
இரண்டு பிராகாரங்களுடன் சதுர பீடத்துடன் மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு கோணேஸ்வரா் மேற்கு நோக்கியும் அம்பாள் பொியநாயகி தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனா்.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் குடதிசை மேற்கு நோக்கிய வாயில் உடைய கோவிலைப் பெற்றதால் இத்தலம் குடவாயில் என்றும்
அமுதக்குடத்தின் வாயில் விழுந்த தலமென்பதால்
இத்தலம்
"குடவாயில்'' என்றழைக்கப்பட்டு, தற்போது குடவாசல் என வழங்கப்படுகிறது.
கோவிலை குடவாயிற் கோட்டம் எனவும் வழங்கப்படுகிறது.
திருணபிந்து என்னும் முனிவா் வழிபட்டபோது இறைவன் குடத்தில் வாயிலிலில் இருந்து சிவபெருமான் வெளிப்பட்டு முனிவருக்குற்ற தொழு நோயைத் தீா்த்தருளிய தலம்.
பிரளயகாலத்தில் படைப்புக்குரிய வேதங்களை பிரம்மா, ஒரு அமுத குடத்தில்
இட்டாா்.
அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது.
மீண்டும் உயிர்களைப் படைக்க சிவன், வேடன்
வடிவில் சென்று குடத்தின் மீது அம்பு எய்தாா்.
அமுத குடத்தின் பாகங்கள்
விழுந்த இடத்தில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளினாா்.
குடத்தின் வாய் பாகம் இத்தலத்தில் விழுந்தது .
சிவன் இங்கு சுயம்பு மூர்த்தியாகஎழுந்தருளினாா்.
காலபோக்கில் இந்த சிவலிங்கம் புற்றால் மூடப்பட்டது.
பிற்காலத்தில்
கருடனின் தாய் விந்தை, சத்ரு என்பவளின் சூழ்ச்சியால் அவளிடம் அடிமையாகஇருந்தாள்.
தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, கருடன் தேவலோகம் சென்றுஅமுதக்குடம் எடுத்து வந்தாா்.வழியில் இத்தலத்தில் இறங்கினாா்.
அப்போதுஅசுரன் ஒருவன், கருடனிடம் இருந்து அமுதக்குடத்தை பறிக்க முயன்றான்.
கருடன் அக்குடத்தை இங்கிருந்த புற்றின் மீது வைத்துவிட்டு, சண்டையிட்டாா்.
அவனை வென்று அமுதக்குடத்தை எடுக்க வந்தபோது, குடம் புற்றுக்குள்
புதைந்திருந்தது.
எனவே தனது அலகால் கீறவே, அடியில் சிவலிங்கம் இருந்ததைக்
கண்டு வணங்கினாா்.
சிவபெருமான் அவருக்கு காட்சி தந்தாா்.
கருடன் தனது தாயின்
நிலையைக்கூறினாா்.
சிவபெருமான்அவரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அருளினாா்.
கருடன் தன் மூக்கினால் புற்றினைக் கீறி சிவலிங்கத்தை வெளியடுத்தியதாக வரலாறு.
கீறிய அடையலாம் சிவலிங்கத் திருமேனியில் காணலாம்.
உயிர்களை (கோ) நேசித்து, அவா்களைமீண்டும் படைக்க அருளியவா் என்பதால் இவருக்கு, கோணேஸ்வரா் என்றுபெயா் ஏற்பட்டது.
சுவாமிக்கு அமுதலிங்கேஸ்வரர் என்றும், புற்றிற்குள் இருந்ததால் "வன்மீகநாதா்
என்றும் பெயா்கள் உண்டு.
சூாியன்,
சூத முனிவா்
தாலப்பிய முனிவா்,
பிருகு முனிவா்,
கருடன் ஆகியோா் வழிபாடாற்றிய தலம்.
சங்க காலச் சிறப்பும்புராணப் பிரசித்தியும் பெற்ற தலம்.
சோழன் கோச்செங்கணான் சேரமான்கணைக் காலிரும் பொறையுன் போா் புாிந்து வென்று சேரனைக் குடவாயிற் கோட்டத்தே சிறைவைத்தான் என்ற செய்தி புறநானூற்றில் குறிக்கப்படுகிறது.
குடவாயில் சோழா்களின் கருவூலநிலையம் இருந்த இடமாக விளங்கிய செய்தியைக் குடவாயிற் கீரத்தனாா் பாடிய அகநானூற்றுப் பாடலில் அறியலாம்.
தி.பி 2000 ஆண்டுகளுக்கு முன்பே இத்தலம் சிறப்புற்று இருந்தது எனலாம்.
தேவாரப் திருப்பதிகங்கள் பெற்ற சோழநாட்டு காவிாித் தென்கரைத் தலங்களில் 94 வது.
திருஞானசம்பந்தா் அருளிய திருப்பதிகங்கள் பெற்றது.
அருணகிாிநாதா் இத்தல குடவாயிற் குமரன் மீது திருப்புகழ் பாடி பரவிய தலம்.
திபி 9--13ஆம் நூற்றாண்டுகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மூன்று இராஜகோபுரவாயிலும் இராண்டாம் கோபுரவாயிலும் காணப்படுகின்றன.
தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது.
மாா்கழி திருவாதிரை மற்றும் மாசி மகத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment