Tuesday, May 16, 2023

ராஜராஜ #சோழனுக்கு #ஆலோசனை #சொன்ன #கருவூர்சித்தர்

#ராஜராஜ #சோழனுக்கு #ஆலோசனை #சொன்ன #கருவூர்சித்தர் 
  
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை கூறும் குருவாக இருந்துள்ளார் கருவூரார் என அழைக்கப்படும் கருவூர் சித்தர். இவர்‌ கரூர்‌ பசுபதீஸ்வரர்‌ ஆலயத்தில்‌ சமாதிபூண்டும்‌ தஞ்சைப்‌ பெருவுடையார் கோவில்‌ பிரகாரத்தில்‌ தனிக்கோவில்‌ கொண்டும்‌ அருளாட்சி செய்து வருகிறார்‌. இவரது அறிவுரைபடியே உலகம் போற்றும் இந்த கோவிலை கட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். வியாழக்கிழமைகளில்‌ இவரை வழிபட்டு வருபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும் அனைத்து வளங்களும் கிடைக்கும்.

ராஜ ராஜ சோழன்
தஞ்சை பெரியகோயில் கட்டுமானப் பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டை செய்யும் போது ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களைஅழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வேதனைப்பட்டார். அப்போது சித்தர் கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது என்று அசரீரி வாக்குகேட்டது.

#கருவூரார் #சித்தர்
இதைக்கேட்ட மன்னர் மகிழ்ச்சியடைந்தார். கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது எனக் கேட்டார். அப்போது போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயிலுக்கு வந்து விட்டார். சித்தர்கள் காற்றின் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை அடைவார்கள் எனவேதான் நினைத்த நேரத்தில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வார்கள்.

கருவூரார் செய்த சிவலிங்க பிரதிஷ்டை
கருவூரார் அங்கிருந்த போகரிடம், எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். அதற்கு போகர், நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்கவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார் மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி சிவலிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவ சிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருக்கு மூலஸ்தானத்திற்கு பின்புறம் ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.


No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....