Wednesday, May 24, 2023

_நமசிவய எனும் வெறும் அஞ்செழுத்து, சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல!! இது ஒரு சித்தர்களின் பரிபாஷை!_

_நமசிவய எனும் வெறும் அஞ்செழுத்து, சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல!! இது ஒரு சித்தர்களின் பரிபாஷை!_

பிரபஞ்சம் உருவானதன் வரிசை ரகசியம் குறித்து என் குருநாதர் திருமூலர் பெருமான் சொல்ல வரும் போது.....

அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே

(1) முதல் வரி : அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்....

ந- என்ற எழுத்தால் மண்ணையும்,
ம- என்ற எழுத்தால் நீரையும், 
சி- என்ற எழுத்தால் நெருப்பையும், 
வ- என்ற எழுத்தால் காற்றையும், 
ய- என்ற எழுத்தால் ஆகாயமும் ஆகிய  ஐந்து பூதங்களை படைத்தான். 

(2) அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்

நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி எவ்வழியும் அஞ்செழுத்தால்  தொடர்ந்து பெருகியிருக்கின்றன..... 

வித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இந்த நான்கும்  பிறவிக்கு மூல கிளைகளாக வந்துள்ளன.
அஞ்செழுத்தால் 84 லட்சம் யோனி பேதங்களையும் இப்புவனத்தில் 
படைத்ததான் 

ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனி என்பான்
ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்
சென்மித்து உழலத் திரோதித்து வெந்நிரய.....8 
                      
என்கிறது ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய "திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா"

ந- என்ற எழுத்தால் எலும்பு, நரம்பு தசையால் ஆன உடலையும், 

ம- என்ற எழுத்தால் நீர் ரத்தம் இவைகளையும், 

சி- என்ற எழுத்தால் நெருப்பு  உடலின் சூட்டையும், 

வ- என்ற எழுத்தால் காற்று, சுவாசம் எனும் சரம் கொண்டு சரீரத்தையும், 

ய- என்ற எழுத்தால் ஆகாயம் கொண்டு அறிவு, மனம் என்பவற்றையும் படைத்தான்.

(3) அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்

இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்காக, 

ந-  பிரமன்         ஆக்கல்  

ம-  திருமால்      காத்தல் 

சி-  ருத்திரன்        அழித்தல் 

வ-  மகேஸ்வரன்  மறைத்தல் 

ய-  சதாசிவன்     அருளல் 

இந்த ஐவரின் உருவால்  அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்.....

(4)  எல்லா உயிர்களுக்கும் உயர்வாக படைக்கப் பெற்ற மனித உடலுக்குள் ஐந்து ஆதாரங்களிலும் ஐந்துவகை  தொழில் செய்யும் தெய்வங்களை நிலைபெற செய்து, அவர்களுக்கு மேலே உச்சிக்குழி முதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள பிரம்மரந்திரம் எனும் நுண்ணிய துவாரத்துக்குள் நெற்றி நாடு நிலையில் மனிதனின் சூக்ஷும  சரீரத்தை துரியம் என்ற நிலையில் வைத்து, அதற்கு மேலே துரியாதீதம் என்ற நிலையில் ஜீவ சொரூபமாக பரம் பொருள் அமர்ந்து (அற ஆழியின் நடுவில் சுடராக, ஜோதியாக) இரு நாசிகள் வழியே சுவாசத்தை 
இழுத்தும், விடுத்தும் உடலை இயக்க  செய்து வருகிறது.

ந-  சுவாதிஷ்டானம்  பிரமன்  ஆக்கல்  

ம- மணிபூரகம்          திருமால்      காத்தல் 

சி- அனாகதம்       ருத்திரன்        அழித்தல் 

வ- விசுக்தி         மகேஸ்வரன்  மறைத்தல் 

ய- ஆக்ஞை       சதாசிவன் அருளல் 

மூலாதாரத்தின் அட்சரம் "ஓம்" அதன் அதிபதி விநாயகர். எனவே அது இதில் சேர்க்கப்படவில்லை.... 

இவ்வாறு அஞ்செழுத்தால் இந்த பிரபஞ்சமும் ,மனிதனும் இயங்கும் விதத்தை நான்கு வரிகளில் நயமாக எங்குரு திருமூலர்  விளக்குகிறார். இதை விவரிக்க இன்னமும் நாலு பக்கம் போதாது......

    - நன்றி..

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...