துடையூர்_வீணாதரர்..!!
அலையலையாய் விரிந்து பரவும் சடாபாரம். வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம். சிற்றாடை அலங்கரிக்கும் இடையை இடப்பக்கம் சற்றே வளைத்து,
இடப்பாதம் சிறிது முன்னெடுத்து நிற்க, கழுத்தணிகலன்களும், அலங்காரத்தோள் வளைகளும், அடுக்கிய கைவளைகளும், மேலும் அழகூட்டுகின்றன. பின்னிரு கரங்கள் மானும் மழுவுமேந்த,
முன்னிரு கரங்களில் நீண்ட வீணையேந்தி இசைக்கிறார் இப்பேரழகு வீணாதரர்.
இறையின் வீணையிசைக்கேற்ப காலடியில் வலப்புறம் நிற்கும் சிறுபூதம் உடுக்கையிசைக்க, இடப்புறம் நிற்கும் அழகிய மங்கை தாளமிசைக்கிறார். மேலே இறைவனின் சடாபாரத்தின் இருபுறமும் வீணையேந்திய கின்னரர்கள் தமது இறக்கையை விரித்தவண்ணம் பறந்தவாறு இவ்வீணாதரரின் இசைக்கு ஒத்திசைக்கின்றனர்.
ஒப்பிடவியலா புன்முறுவலுடன் நூற்றாண்டுகளாய் தென்கோட்டச் சிற்பமாய் உறைந்து நிற்கிறார்
இம் முற்சோழர் கால பேரழகர்..!!
அமைவிடம்: கடம்பந்துறை_மகாதேவர் கோவில் என கல்வெட்டுகளில் சுட்டப்படும் விஷமங்களேசுவரர் திருக்கோவில்,
துடையூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
No comments:
Post a Comment