Sunday, June 11, 2023

உலகிலேயே பழமையான மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக வாரணாசி அறியப் படுகிறது

வாரணாசியின் இருண்ட
காலங்கள். 
உலகிலேயே பழமையான மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக வாரணாசி அறியப் படுகிறது. பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் இது ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்புகிறார்கள், மேலும் சிலர் இது இன்னும் பழமையானது என்று கூறுகின்றனர். இருப்பினும், பழங்காலத்திலிருந்தே, வாரணாசியின் வசீகரமும் அழகும் ஒப்பிட முடியாத காட்சியாக இருந்து வருகிறது.

காசி' என்ற சொல்லுக்கு 'ஒளிரும் நகரம்' என்று பொருள்படுகிறது. இங்குள்ள கோயில்களில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தில் இந்நகரம் ஒளிர்வதாலேயே இப்பெயர் வந்திருக்கக்கூடும். 
 
கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார், காசி வழியாகப் பயணித்து கல்கத்தாவில் கடலில் கலக்கிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையில் அகண்டு...... அருள் சக்திகளுடன் பயணிக்கிறது. 
 
அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. 

கங்கையில் நீராடுவது மனிதனை உள்ளிருந்து தூய்மையாக்கும் என்று பலர் நம்புகிறார்கள். கங்கா தேவியின் அருள் அப்படியென்றால், அது பக்தர்களின் அனைத்தையும் கழுவி விடுகிறது. 
 
இந்து, சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்த இடம் காசி. நாம் நீண்ட கால அந்நியர்களின் ஆட்சியால் கைவிட்ட  பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் தினசரி வாழ்வில் கடைபிடித்துக் கொண்டு, 'காசி இந்துக்கள் இன்றும் உறுதியாக இருக்கிறார்கள்! 

வேத காலத்தில் இருந்து வழிவழியாய் இந்துக்களின் தலைநகராய் பொது நகராய் இருந்தது. காசி, பரந்து விரிந்த பாரத கண்டத்தில் அது புண்ணிய நதியான கங்கையின் ஓரத்தில் ஞானிகளாலும் ரிஷிகளாலும் அடையாளம் காணபட்ட புண்ணிய இடமாக இருந்தது.

அதற்கான முதல் சவால் புத்த சமண காலத்தில் வந்தாலும் பின்னாளில் அவை முறியடிக்கபட்டன, நிஜமான ஆபத்து ஆப்கானியர் இங்கே ஆளவந்த பொழுது நடந்தது.

இங்கே சில விஷயங்களை தென்னகத்தாரால் புரிந்து கொள்ள முடியாது, காரணம் ஆப்கானியர் ஆட்சியின் கருப்பு பக்கம் தமிழகம் போன்ற மாநிலங்களில் தெரியாது காரணம் நாயக்க இந்து மன்னர்கள் இங்கு வலுவாய் இருந்தார்கள்.

ஆனால் வட இந்தியா அப்படி அல்ல அது 1300 முதல் 1650 வரை மிகபெரிய இக்கட்டில் இருந்தது இந்து அடையாளங்கள் இல்லாதபடி பலத்த மாற்றங்களும் அடையாள ஒழிப்பும் இருந்தன‌.

காசிக்கு இதில் முதலிடம் இருந்தது.

அதை மீட்க‌ கிளம்பியவர் வீரசிவாஜி அவருக்கும் காசிக்கும் பொருத்தம் அதிகம், ஆனால் வெகு சாமான்ய குடும்பத்து சிவாஜி பிஜப்பூர் சுல்தானை அடக்கி கோல்கொண்டா சுல்தானை ஒடுங்கி அதன் பின் மொகலாயருடன் மோதி , அவரின் போராட்டமும் வீரமும் துணிச்சலும் அதிகம்.

அவர் படாதபாடுபட்டு கோட்டைகளை பிடித்தும் முடிசூட்ட முடியா தடை இருந்தது, கடைசியில் அவுரங்கசீப்பிடம் இருந்து தப்பி காசியில் தலைமறைவாக திரிந்து மராட்டியம் திரும்பிய பின்புதான் சத்ரபதி என முடிசூட்டினர், ஒரு அரசனாக அங்கீகரிக்கபட்டார்.

ஆம், காசிக்கு சென்று வந்த பின்பே அவருக்கு முழு வெற்றி கிட்டிற்று.

அவர் காசியினை மீட்க கடும் பிரயத்தனம் செய்தான் ஆனால் விதி அவனுக்கு இல்லை, 50 வயதிலே அவர் மரணமடைந்தார்.

அவரது மகன் சாம்பாஜியினை அரவுரங்கசீப் வீசி எறிந்தார், காசியினை அவுரங்கசீப் பலமாக மாற்றினார், வேகமான அடையாள மாற்றங்கள் நடந்தன, சிவாஜியின் கனவு வீணாக போய் விடும் அச்சம் எழுந்தது.

வரலாற்றில் அது ஒரு புரட்சி, அவுரங்கசீப்பால் சிவாஜி மகனை கொல்ல முடிந்ததே தவிர சிவாஜி ஏற்றி வைத்த இந்து எழுச்சியினை அடக்க முடியவில்லை, அலை அலையாய் எழுந்து மராட்டியர் அடித்த அடியில் மொகலாய வம்சம் அசைந்தது, அவுரங்கசீப்புக்கு பின் மெல்ல சரிந்தது.

இக்காலகட்டத்தில்தான் அகல்பாய் ஹோல்கர் இந்தூர் ராணியாக முடிசூடினார், அவர் ஹோல்கர் எனும் மராட்டிய வம்சத்தின் ராணி சிவாஜி ஏற்றி வைத்த எழுச்சியில் உதித்த இந்து ராணி.

அவள் கணவர் காண்டே ராவ் ஹோல்கர் 1754ல் மொகலாயருடன் போரில் இறக்க ராணி முடிசூடினார், அதுவும் சில ஆண்டு கழித்து 1767ல் முடிசூட்டினார்.

இக்காலம் நம் கட்டபொம்மனுக்கு முந்தைய காலம், தெற்கே ராபர்ட் கிளைவ் கால் வைத்த காலம்.

அந்நேரம் ராணி மிக துணிச்சலாக நாட்டை நடத்தினார், சுமார் 30 ஆண்டு காலம் அவளின் சமஸ்தானம் அசைக்க முடியா பலத்துடன் இருந்தது.

ராஜமாதா ஜீஜாபாயின் அவதாரமாக மக்கள் அவரை கொண்டாடினார்கள், அவள் நடத்திய வீரபோர்களால் காசி மராத்தியர் வசமாயிற்று

சுமார் 700 ஆண்டுக்கு பின் காசியில் இந்து ஆலயத்தை மீட்டவள் அவள்தான், அவுரங்கசீப் உருவாக்கிய அனைத்தயும் கலைத்து போட்டாள்.

அவள் காலத்தில்தான் கங்கை படி கட்டபட்டது, ஆலயத்தின் பல விஷயங்கள் செய்யபட்டன‌.

அவள் காசி மட்டுமல்ல மதுரா, சோமநாதபுரி என எங்கெல்லாமோ திருபணிகள் செய்தாள், சோமநாதபுரி ஆலயத்தில் முதல் விளக்கினை அவள்தான் ஏற்றி ஓரளவு துலங்க செய்தாள்.

அந்த மகராணி சுத்தமான இந்து அரசி, அவளின் 30 ஆண்டு கால ஆட்சி காசியின் பொற்காலம். வீரசிவாஜி காசி பற்றி கண்டிருந்த கனவை எல்லாம் அவளே நிறைவேற்றி வைத்தாள்.

அவளுக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு , வட இந்தியாவில் மிகபெரிய அடையாளம் அந்த அகல்யாபாய்.

அவள் ஒரு வீரதுறவி சாயல், அப்படித்தான் அவள் கொண்டாடபடுகின்றாள். காசி படிதுறையில் அவளுக்கு சிலை இன்றும் உண்டு.

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...