Saturday, June 10, 2023

இறைவன் எனக்கு இவ்வளவு செய்கிறாய் !! நான் உனக்கு மேலும் செய்கிறேன் !! என்று அருள்வானா ??

இறைவன் 
#கொண்டாடினால்_தான்_அருள்வானா ??
பாடினால் மகிழ்வானா ??
மந்திரத்தில் மயங்குவானா ??
பரிகாரம் செய்தால் பலன் கொடுப்பானா ?? இப்படி எண்ணற்ற கேள்விகள் நம்முள்ளே அதன் மெய் தன்மையை சிந்திப்போமா !!

இன்று 
#கொண்டாடினால்_தான்_அருள்வானா ??

கொண்டாடுகிறேன் என்றால் என்ன ??

நம்மை ஒருவர் கொண்டாடுகிறார் என்றால் !!
நம் மீது தனிக்கவனம் செலுத்தி ..
நமக்கு எது பிடிக்குமோ அதையெல்லாம் செய்து ..
நமக்கு அவர்கள் எப்படி இருந்தால் / நடந்தால் விரும்புவோம் அப்படியெல்லாம் இருந்து ..
நாம் மகிழ்ச்சியில் அவர்கள் மகிழ்வது தானே கொண்டாட்டம் ..

இப்போது 
இறைவனுக்கு வருவோம் !!
நாம் இறைவனுக்கு அபிஷேகம் செய்து !! 
ஆடை உடுத்தி !! 
மலர்கள் சாற்றி !!! 
விளக்கு ஏற்றி !! 
மந்திரம் சொல்லி !! பாடி !! 
நெய்வேத்தியம் செய்து !!
நமக்கான நேரத்தை !! பொருளை !! குரலை !! மனத்தை !! கவனத்தை !! கொடுத்து இறைவனை கொண்டாடுகிறோம் !!
அப்படி கொண்டாடுவதால் மகிழ்ந்து ..
எனக்கு இவ்வளவு செய்கிறாய் !! நான் உனக்கு மேலும் செய்கிறேன் !! என்று அருள்வானா ?? 
என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும் ..

இறைவன் என்பான் எதிலும் நிறைந்து கலந்து எப்போதும் அருளிக்கொண்டே இருக்கிறான் !! என்பதே நிதர்சனம் !!

அப்புறம் இப்படி செய்வதால் என்னதான் நிகழ்கிறது என்ற கேள்வி எழும் தானே !!

அருள்வது அவன் தான் !! 
எல்லாம் அருள்தான் !!
 எதையும் வேறுவிதமாக எடுத்துக்கொண்டு !! 
எடுத்தவிதத்தில் சிந்தித்து !! 
அதை எண்ணமாக மாற்றி !! 
அந்த எண்ணத்தின் வழியே நமக்கு தேவையில்லாததை எல்லாம் ஈர்த்து !! 
நாமே நமக்கு பிரச்சனையாகி கொண்டு இருப்பதில் இருந்து !! 
நாமே நம்மை திருத்திக்கொள்ளும் ஞானம் பிறக்கும் !!

எப்படி என்றால் ??
#அபிஷேகம் புறத்தே செய்யும்போது அகத்தே உள்ள அழுக்குகள் கழுவப்படுகிறது !! காரணம் நம் எண்ணம் இறைவனை சுத்தம் செய்கிறேன் என்று இருப்பதால் ..

#தூய_ஆடை அணிவிக்கும் போது !!! நாம் வெளியே இருந்து எடுத்துக்கொண்டு நம் அகத்தே சூடிக்கொள்ளும் எண்ணத்தில் தெளிவு !! நேர்மறை போன்றவை மிளிரும் !!

#மலர்கள் சாற்றும்போது !! நம்மையும் தன்னோடும் தன்னுள்ளும் சூடி உடனிருந்து மலர்வித்து !! நம்மை வாசமுற செய்து வாழ்விக்க !! சர்வவல்லமை படைத்த இறைவன் என்றும் இருக்கிறான் என்ற தீர்க்கம் பிறக்கும் !!

#விளக்கு ஏற்றும்போது !! நம்முள்ளே அகத்தில் பல்வேறு குழப்பங்கள் !! தெளிவு இல்லாமை !! புரிதத்தில் உள்ள குறைபாடு !! போன்ற அகம் இருளாக இருக்கிறது !! அந்த விளக்கின் வழியே வெளிப்படும் ஒளி நம்முள்ளே ஊடுருவி இரையாற்றலோடு கலந்து நம்முள்ளே இருக்கும் அகஇருளை நீக்கி !! அருளொளியை உணர்விக்கும் !!

#மந்திரம் சொல்ல பாட !! ஒலி வழியே எழும்பும் அதிர்வலைகள் நம்மோடு சேர்த்து அந்த இடத்தையே ஓர் அருளாற்றல் நிறைய செய்து !! நம்முள்ளும் வெளியும் ஓர் புத்துணர்வும் தெம்பும் கொண்டுவந்து !! நம்முள்ளும் நம்சுற்றமும் நல்ல அதிர்வலையை நிறையே செய்யும் !!

#நெய்வேத்தியம் செய்யும்போது !! நான் உண்ண காரணமாக இருக்கும் இறைவனோடு சேர்த்து !! இந்த உணவை நாம் உணவாக மாற்ற !! இறையால் கையாளப்பட எண்ணற்ற ஜீவன்கள் நினைவுக்கு வந்து !! அவர்களும் இறைவன் கருணையை உணர்ந்து அனுபவிக்க எண்ணம் தோன்றும் !! பேதம் கடந்த நேசம் பிறக்கும் !!

இப்படி கொண்டாட்டத்தின் வழியே இறைவன் மகிழ்கிறானோ இல்லையோ !! உங்களுள் ஓர் பரிபக்குவம் பிறக்கின்றது !! உங்களின் கவனம் எதிலோ செல்வதில் இருந்து காக்கப்படுகிறது !!

இறைவன் எதற்கும் எப்போதும் பேதம் கடந்து அருளிய வண்ணமே இருக்க !!
அதை அருளால் தான் என்று உணரக்கூடிய பக்குவத்தை பெறவே இந்த கொண்டாட்டம் எல்லாம் ..

ஏதோ அவனால் இவனுள் தோன்றியதது ..

அடுத்த கேள்விகளுக்கும் பதிவு வழியே பதில் வரும் ..

திருச்சிற்றம்பலம் 

நடராஜா நடராஜா

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...