Saturday, June 10, 2023

*சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

அருள்மிகு 
அமிர்த கலச நாதர் திருக்கோயில், திருக்கலயநல்லூர்,    சாக்கோட்டை  – 
612 401. 
கும்பகோணம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.

*மூலவர்:அமிர்தகடேஸ்வரர்,  அமிர்தகலசநாதர்
*அம்மன்: அமிர்தவல்லி
*தல விருட்சம்: வன்னி
*தீர்த்தம்: நால்வேத தீர்த்தம்
*புராண பெயர்: திருக்கலய நல்லூர்
ஊர்: சாக்கோட்டை

*பாடியவர்கள்:
சுந்தரர்-
தேவாரப்பதிகம் 

*தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.              

*இக்கோயில் சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கிறது .   

*இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது.            

*உலகம் அழியும் ஊழிக் காலத்தில் சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது,
உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும்,       அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும்,  இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்ற பெயர் பெற்றார் என்றும் தலபுராணம் கூறுகிறது. 

*பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.      

*அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும். அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவருக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம். 

*அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது.                       

*ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத் தக்கது. 

*இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் 
சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைக்குப் பின்னால் சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. 
இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். 

*இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனதாக அறிகிறோம். 

*தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கையை கவிழ்த்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது. 

*இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார்.

*சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.  

*சாக்கோட்டை (சாக்கியர் கோட்டை) என்பதிலிருந்து     பொளத்தர்களுக்கும் இத்தலத்திற்கும் இருந்த தொடர்பு பற்றி அறியலாம். 

*சாக்கியநாயனார்: இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும் எப்போதும் மனதில் சிவ சிந்தனையுடன் இருந்தார்.  இவர், ஒரு நாள் வெளியே சென்றபோது வழியில்  லிங்கம் ஒன்று வழிபாடு ஏதும் இன்றி இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார். லிங்கத்தை நீராட்டி, மலர் போட்டு, பூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவும் இல்லை.  சிவனின் மீது கொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து “நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின் மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், வீசிய கல்லை மலராக ஏற்றுக்கொண்டார். இதே போல் தினமும் லிங்கத்தின் மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன் பின் உணவருந்தி வந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன் மீது கோபத்தில் கல் எறிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கியநாயனார், சிவ சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால், சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந்தார். திடீரென நினைவு வந்ததும், தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட்டோம் என வருந்தி ஓடி சென்று கல் எறிந்து சிவபூஜை செய்தார். சிவபக்தியுடன் இவர் எறிந்த கல் கயிலையில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார்.  

*சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோவில், கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  
*சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.              

🙏 சிவாயநம

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...