Thursday, June 22, 2023

கீழப்பாவூர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர்

விசித்திர வடிவ நரசிம்மர்
 தென்காசியில் இருந்து கிழக்கில்  பாவூர்சத்திரம் - சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ள கீழப்பாவூர் உள்ளது.
கீழப்பாவூர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர்
கீழப்பாவூர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் திரிபங்க நிலையில் கண்களை மூடி தவக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார்.

இரண்யனை மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப் பிடிக்க, இரண்டு கரங்களால் குடலை உருவ, இதர கரங்களில் சக்கரம், சங்கு தாரியாய் ஆயுதங்களுடனும், வாழ்த்தும் கரங்களுடனும் ஹிரண்ய வதத்தோற்றம் கொண்டுள்ளார்.

இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று இராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.

 கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் போன இந்த ஜென்பத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். உலகியலான இன்பமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...