Wednesday, June 21, 2023

ஓம் தக்ஷிணாமூர்த்தி திருவடிகள் போற்றி குரு பகவானே சரணம்

ஓம் தக்ஷிணாமூர்த்தி திருவடிகள் போற்றி குரு பகவானே சரணம்  கோடி நலம் அருளும் பார்வையின் ஈசாஎன்று இன்று 22/6/23  வியாழக்கிழமை குருவாரம் வணங்கிட எல்லா வளங்களும் வந்து சேரும் 
ப்ரஹஸ்பதியே சுடர் நிதியே ஜாதகமெங்கிலும் சாதகமாகிட வேணும் குருவே வா! ஓம் தக்ஷிணாமூர்த்தி திருவடிகள் போற்றி

குரு பகவானே சரணம்
கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா
பதம் சரணம் நிதம் சரணம்
மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா
ஆடும் ஞான காரகா
வேதம் கண்ட ஈஸ்வரா
வியாழன் என்னும் மன்னவா
தேவ லோகம் போற்றுகின்ற எங்கள் யுவநாதா

குருவே சரணம் உந்தன் குருவடி சரணம்
ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம்

ஞான சூரியன் உனது வதனமாம்
ஞானத்துந்துபி உனது நயனமாம்
ஒன்று சேர பெரும் விந்தையானவா போற்றி
குருவே போற்றி
வரம் அளித்திடும் உனது பாதமே போற்றி

குரு பகவானே சரணம்
கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா
பதம் சரணம் நிதம் சரணம்
மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா
ஆடும் ஞான காரகா
வேதம் கண்ட ஈஸ்வரா
வியாழன் என்னும் மன்னவா
தேவ லோகம் போற்றுகின்ற எங்கள் யுவநாதா

குருவே சரணம் உந்தன் குருவடி சரணம்
ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம்

கரம் இருக்குமோர் கமண்டலம்
கருணை என்பதோ அதில் ஜலம்
கணக்கேதும் இல்லாமல் நீ அருள்பவன் தானே
அதை கவிழ்த்தாலும் ஜீவ வெள்ளமே குரு பகவானே

திருமுகப்பார்வை சிறிதே சேர்த்து
எறுவினை எங்கள் மனதில் ஊற்று
கஜமதில் உலவும் கனகநாதனே குருபகவானே

வில்லும் மீனும் ஆளும் அரசே
வாக்கில் நின்றிட வேண்டினோம்
வியாழக்கிழமை வாரந்தோறும்
தீபமேற்றியே போற்றினோம்

ப்ரஹஸ்பதியே சுடர் நிதியே
ஜாதகமெங்கிலும் சாதகமாகிட வேணும் குருவே வா

தவவிளக்கமே தரும் கரம்
தண்டம் ஏந்திடும் இடப்புறம்
எமக்காக தவமுகம் காட்டும் குருபகவானே
இங்கே எமக்காக அறிவொளி ஏற்றும் ஜெபநிலையானே

அபயமாய் தோன்றும் வரமாய் உந்தன்
அருளினைக் காட்டும் கரமே கொண்டு
ஆங்கீரசனின் சுதனே எம்மை அணைக்க வேணும்

உபதேசங்கள் நிகழுமிடத்தில்
உறையும் பீதாம்பரநாதா
உன்னை நினைந்து வலமாய் வந்தோம்
உறுதுணை செய்வாய் சந்தானா

குரு பலமே தரவருவாய்
கோளில் நின்று கோலம் காணும் எங்கள் குருதேவா

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்பதாகும் அதாவது ஞானகடவுள் ஆக இருக்கும் பரமகுரு தனது ஞானத்தை பக்தர்களுக்கு தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.  தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். "சிவ தலங்கள்" கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள். பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Followers

கூத்தாண்டவர் கோவில் கூவாகம் பற்றிய பதிவுகள்....

அருள்மிகு கூத்தாண்டவர் கோவில் கூவாகம் பற்றிய பதிவுகள் :* திருநங்கைகளுக்கென்று புகழ் பெற்ற பல புண்ணிய ஸ்தலங்கள் இருப்பினும் விழுப...