Sunday, July 30, 2023

ஆடி 18, ஆக 3 -8 -2023 வியாழக்கிழமையில்சிறப்பு: ஆடிப்பெருக்கு, ,வழிபாடு



ஆடி 18, ஆக 3 -8 -2023 வியாழக்கிழமையில்
சிறப்பு: ஆடிப்பெருக்கு, ,
வழிபாடு: சகல நதி தீரங்களில் புனித நீராடுதல், முருகனுக்கு விரதமிருந்தும், அம்மனுக்கு பொங்கலிட்டும் வழிபடுதல்

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும்.

ஆடி பதினெட்டாம் நாள் அற்புதமான நாள். தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் நீருக்கு விழா எடுக்கும் நாள். காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரை யோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நாள் ஆடிப்பெருக்கு நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.

ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் இந்த ஆடிப்பெருக்கு நாளில் அம்பிகையை வேண்டிக்கொள்வது வழக்கம். 

ஆடிப்பெருக்கு நாளில் செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும்.

காவிரி அன்னையை கர்ப்பிணியாக பாவித்து வளைகாப்பு செய்வது போல பலவகை உணவுகளை படைத்து மஞ்சள் சரடு, காதோலை கருகமணி, பூமாலை, வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் வைத்து வணங்கி புதிய மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் தங்கள் கைகளில் மஞ்சள் சரடுகளை கட்டிக்கொள்வார்கள். சிலரது வீடுகளில் முளைப்பாறி வளர்த்து எடுத்து வந்து நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள்.

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம்.

மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அதில் முக்கியமான இந்த ஒரு பொருளை ஆடிப்பெருக்கென்று நீங்கள் வாங்கி வைத்தால் குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்பானது அதிகரிக்கும்.

சுபகாரிய தடைகள், வருமானம் பெருகுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் வறுமையில் இருந்து, நல்ல நிலைக்கு மென்மேலும் வளர்ச்சி அடைய ஆடிப்பெருக்கு நாள் அன்று அம்மனை வீட்டில் வழிபடுங்கள்.சர்க்கரை பொங்கல் நெய்வேதியமாக படைத்து அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.

கல் உப்பு வாங்குவது ரொம்பவே சிறப்பானது. கல் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் எனவே ஆடிப்பெருக்கு அன்று புதிதாக கல் உப்பு பாக்கெட் ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து வீட்டில் இருக்கும் பீங்கான் ஜாடியில் முழுவதுமாக தழும்ப நிரப்பி வைக்க வேண்டும். அது போல இந்த ஒரு முக்கியமான பொருளையும் ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டும். குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கிய பொருளாகும்.

குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் பூரண அம்சமாக விளங்குகிறது. வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு ஒவ்வொரு மஞ்சள் கிழங்கை கொடுத்து வழி அனுப்பினால் உங்களுடைய வறுமை நீங்கி தனதானியம் பெருகும்.

வீட்டிற்கு வரும் பெண்களை வெறுங்கையோடு அனுப்பாமல் குடிக்க மோர் அல்லது தண்ணீர் கொடுத்து குண்டு மஞ்சள் ஒன்றை கொடுத்து அனுப்புங்கள். அது போல ஆடிப்பெருக்கு நாளில் குண்டு மஞ்சளை புதிதாக வாங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் முழுவதுமாக நிரம்பும் படி வைக்க வேண்டும். 

எப்பொழுதும் பெண்கள் குண்டு மஞ்சளை சிறிதளவு தேய்த்து முகத்தில் பூசி தலைக்கு குளித்து வந்தால் பலவிதமான நோய்கள் நீங்கும் .

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி மட்டுமல்ல வைகையை, தாமிரபரணி என பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. எனவே ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா இந்த களைகட்டப்போகிறது.

ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். வீட்டின் பூஜை அறையில் தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்களை வைத்து வணங்கி அதை பீரோவில் வைக்க செல்வ வளம் பெருகும்

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...