ஆடிப்
அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர்.
தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி கயிறு மாற்றிக்கொள்வர்.
எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால்,
அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.
மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் புண்ணியநதி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.
திருமணம்,
காதணிவிழா,
மஞ்சள்நீர் சடங்கு என்று எல்லா விதமான சுபநிகழ்ச்சிகளையும் ஆடி மாதத்தில் செய்தால் சரிப்பட்டு வராது என்பது நம்மில் பலரால் பலகாலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை.
அதே சமயம் கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம் தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக அம்மன் கோயில்களில்
தீ மிதித்தல், பூச்சொரிதல், காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது, மற்றும் உற்சவம் என ஆடி மாத விசேஷங்களே தனி விழா தான்.
ஒருபுறம் ஸ்ரீ துர்க்கை அம்மன்,
ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன்,
ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ வேம்புலியம்மன்,
ஸ்ரீ பச்சையம்மன் என அம்மன் கோயில் திருவிழாக்கள் இருக்கும் ஆடி மாதத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு
ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.
முன்னாட்களில் கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதை நீங்க வழிபாடு செய்தது தான் அம்மன் வழிப்பாடு.
ஊர் வளம் பெறவேண்டி நதிகளை போற்றுவதுமாக தான் இன்றும் தொடர்கிறது.
முக்கியமாக, சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி-ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ சேமிப்பில் வைத்திருக்கும் ஏழை மக்கள், ஆடியில் அது தீர்ந்து உணவுக்கு தடுமாறுவார்கள்.
மழை இன்றி பஞ்சத்தில் இருக்கும் அவர்கள் ஆடி மாதத்தில் விதைவிதைத்து, விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி விளைச்சலுக்கு முக்கிய காரணமான தண்ணீரை போற்றியும், விளைச்சலுக்கு ஏற்ற மாரி மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும் வழிப்படுகிற விழா
ஆடிப் பெருக்கு.
ஆடிப் பெருக்கு நன்னாளில், நதிகளை வணங்கினால் விவசாயம் செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிப்பட்டால் மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர்.
சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம்.
இந்தியாவில் காவிரி நதி ஓடுகிற ஊர்களில் ஆடிப் பெருக்கு வைபவம் நடக்கும்.
காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை, திருமாங்கல்யம், பழங்கள், கருமணி, சீர்வரிசை பொருட்கள், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரியை வணங்கி, படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம் கொடுத்து, பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள்.
இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக அமையும் என்றும், குறிப்பாக புதுமணத் தம்பதியர்கள் காவிரிக் கரையில் குடும்பத்தோடு வந்து, திருமணத்தின் போது அணிவித்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, தாலிபிரித்து கட்டும் சடங்கு காவிரிக் கரையில் செய்வதால், காவிரிக் கரையில் தண்ணீரில் புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும் இன்பம் பெருகுமாம்.
ஆடிப் பெருக்கு கொண்டாடும் காரணம்:
விவசாயிகளுக்கும் உகந்த மாதம்
இந்த ஆடி மாதம். ஆம்,
உழவு பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம்.
பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன் கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.
ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்.
ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது.
ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது.
இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு.
“இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.
தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர்.
இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவர்.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.
நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர்.
அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது.
இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம்.
நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர்.*
*ஓம் நமசிவாய*
No comments:
Post a Comment