Tuesday, July 25, 2023

*வழக்குகளை தீர்க்கும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில்*

🌹அகிலம்  காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே  சிவமே என் வரமே. எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் 🌹
🙇இனிய வழக்கறுத்தீஸ்வரர் 

*வழக்குகளை தீர்க்கும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில்*

*காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில்*

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் தொடக்கத்திலேயே வலது வலதுபுறமாக அருள்மிகு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முதலில் உற்சவம் மண்டபத்தில் விநாயகரைத் தரிசிக்கலாம்

அடுத்து வழக்கறித்தீஸ்வரரை தரிசிக்கலாம். 

இந்த இரு சுவாமிகளும் கிழக்கு நோக்கிய வண்ணம் அமர்ந்துள்ளனர்.இதில் வழக்கறித்தீஸ்வரர் லிங்க திருவருட்கொண்டு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாகக் காட்சியுடன் அருள் பாலித்து வருகின்றார். 

ஒரே திருத்தலத்தில் இரண்டு சன்னதி கொண்டுள்ள திருத்தலம் என்ற பெருமையும் இந்த கோயிலுக்கு உள்ளது.சத், அசத் என்பதற்கான அர்த்தத்தை முழுமையாக அறிய முடியாமல் தேவர்களும், முனிவர்களும் குழம்பியுள்ளனர். 

அந்த பொருளுக்கு உண்மையான விளக்கத்தை அறிந்து தெளிவு பெறத் தேவர்களும், முனிவர்களும் காஞ்சிபுரம் அடைந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.தேவர்கள் முனிவர்கள் இடையே ஏற்பட்ட இந்த சந்தேகத்தைச் சிவபெருமானே நேரில் வந்து விளக்கியதால் இந்த கோயிலுக்கு வழக்கறித்தீஸ்வரர் திருக்கோயில் என்ற பெயர் பெற்றது.

பக்தர்கள் தங்களின் மனக்கவலையையும், தேவைகளையும் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானிடம் கூறினால்அவர் அதை உடனடியாக தீர்த்து வைப்பார் என்று நம்பப்படுகிறது. 

இந்த கோயிலில் ஏராளமான அரசியல் மற்றும் கலை பிரபலங்கள் வந்து தங்களின் வழக்குகள் தீரச் சிறப்பு யாகங்களைச் செய்துள்ளனர்.

வழக்கறுத்தீஸ்வரர்_சுவாமி

சிவாய நம🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் சிவனே சரணாகதி 🙏

அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏

உலகின் முதல்வன் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்.

 அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி என்றும் உன் அடிமை ஷிவானி கௌரி🙇

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....