Friday, July 28, 2023

கோவில் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் தருவது ஏன்?

🛕 கோவில் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் தருவது ஏன்? 
கோவிலில் 💫 தீர்த்தம் ஏன் செம்பு பாத்திரத்தில் மட்டும் 👉 தருகிறார்கள் தெரியுமா?

🌟 கோவில்களில் கொடுக்கும் தீர்த்தம் செம்பு பாத்திரத்தில் மட்டும் கொடுப்பார்கள். அது ஏன் இந்த பாத்திரத்தில் மட்டும் தருகிறார்கள்? என்று கவனித்திருக்கீர்களா..

🌟 இவ்வாறு, கோவில் தீர்த்தத்தை செம்பு பாத்திரத்தில் தருவதற்கு காரணம் என்ன? என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க..

🌟 கோவில்களில் கொடுக்கும் தீர்த்தத்தை வாங்குவதற்கு செல்வந்தர்கள் கூட வரிசையில் நின்று வாங்குவார்கள். ஏனென்றால் அந்த தீர்த்தம் வேறு எங்கும் கிடைக்காது. கோவில்களில் மட்டும் தான் கிடைக்கும். அதில் தெய்வீக சக்தி நிறைந்துள்ளது. அதனால் தான் தீர்த்தம் என்று கூறுகிறோம். அந்த தீர்த்தத்தை நாம் குடிக்கும் போது அது நமக்கு எந்த வகையிலும் தீங்கினை ஏற்படுத்தாது. 

🌟 பொதுவாக தண்ணீர் குழாயிலிருந்து வருகிறது. அந்த தண்ணீரை அடிக்கடி சுத்திகரிக்கப்பட மாட்டார்கள். அதனால் தான் சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பார்கள். 

🌟 இவ்வாறு குடிக்க முடியாதவர்கள் செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிப்பதால், இவை உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலுக்கு தேவையான உப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதனால் தான் கோவில்களில் செம்பு பாத்திரத்தில் தீர்த்தம் தருகிறார்கள். 

🌟 இந்த கோவில் தீர்த்தத்தோடு துளசி இலை சேர்ப்பதால் சளி, இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இது அருமருந்தாக இருக்கிறது.

🌟 நாம் வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் முந்தைய இரவோ அல்லது குறைந்தது நான்கு மணிநேரம் முன்பாக தண்ணீரை நிரப்பி வைத்து, பிறகு அந்த நீரை குடித்தால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

🌟 செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்படும் நீர், நம் உடலில் உள்ள நச்சுக்களை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...