Tuesday, July 25, 2023

அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்:

அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்:
 அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிக முக்கியமாகும். எங்கும், எதிலும் நிறைந்தவன் இறைவன். நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என நிறைய பூஜை பொருட்கள் வாங்கி சென்று இறைவனை தரிசித்து வருகின்றனர். இறைவனுக்கு ஏன் அர்ச்சனை பொருட்களை வைத்து படைக்கின்றனர் என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.

தேங்காய் :

தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். 
அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. 
அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும் பொழுது வெண்மையான மனமும், 
அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.

விபூதி :

 நாமும் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம். 
ஆதலால் நான் தான் என்ற அகம்பாவமும், சுயநலமும், பொறாமையும் இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், 
சிந்தனையையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம் :

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு நிறத்தில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். 
ஆனால் முளைக்காது. 
ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

விளக்கு :

ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்க முடியாது. 
ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்க முடியும். 
அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, 
அடுத்தவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

எந்த ஒரு பொருளும் இறைவனுக்கு படைக்கும் போதும், ஏன் அந்த பொருளை படைக்கிறோம் என்று தெரிந்துக்கொள்வது மிக முக்கியமாகும்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

Followers

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான #திருஓணகாந்தன்தளி[237] வரலாறு மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் உற்சவர்...