ஸ்ரீ திருமறைநாதர் கோயில் - திருவாதவூர்
மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்தருளிய புண்ணிய பூமி, கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் உற்ற தோழரான கபிலரும் இத்தலத்திலேயே பிறந்துள்ளார் . சம்பந்தர் இத்தலத்தை வைப்பு தலமாக பாடியுளார் .மாணிக்கவாசகருக்கு இவ்விறைவன் திருச்சிலம்பொலியைக் காட்டியருளிய தலம்.வாதவூர் பாண்டி நாட்டுத் தலம்; இத்தலத்தை "தென் புறம்பு நாட்டுத் திருவாதவூர்" என்பார்கள் .
ஐந்து நிலைகள் உடைய இராஜகோபுரம் இத்தலத்தின் பிரமாண்டத்தை உணர்த்துகிறது . கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் நடத்திய ஆரண கேத வேள்வியில் நீலதிருமேனியாக அம்பிகை இங்கு தோன்றினாள். எனவே அம்பிகையின் பெயர் ஆரணவல்லி என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் நூற்றுக்கால் மண்டபம் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் சிலம்பொலி காட்டியதன் நினைவாக நாயக்கர் காலத்தில் காட்டியுள்ளார் .இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்பநுட்பம் வாய்ந்தவை.
சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத்தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது.இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது.
சிந்தாமணி விநாயகர், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரருக்கு தனி சன்னிதிகள் உள்ளன.
இக்கோயிலுக்கு வரும் வழியில் சாலியின் அருகில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது , தற்போது அங்கு சிறிய கோயிலை கட்டியுள்ளார்கள்.
இக்கோயிலானது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 KM தொலைவில் உள்ளது .
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment