இதுவரை கண்டிராத வடிவத்தில் சிவபெருமான்...!
பிரமாண்டமான பாறைகளால் ஆன அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம் சிவபெருமானின் தனித்துவமான சிலைக்கு பெயர் பெற்றது.
அர்த்தநாரீஸ்வரர் என்பது சிவன் மற்றும் பார்வதியின் இணைந்த வடிவமாகும். ஆனால் இக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும், நடுவில் பிரிந்து காட்சியளிக்கிறார்.
இந்த சிலையின் வலது பாதி சிவபெருமானையும், இடது பாதி பார்வதி தேவியையும் குறிக்கிறது. காளை, சிங்கம் போன்ற விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்ட சிலையுடன் ஒரு கல் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் யாதவ் ஆட்சியாளர் ராமச்சந்திரதேவ் ஆட்சியின் போது ஹேமதபந்தி பாணியில் இரண்டு சகோதரர்கள் பிரம்மதேவ் ரெய்னா மற்றும் பைதேவ்ரெய்னா ஆகியோரால் கட்டப்பட்டது.
கிருஷ்ணதேவராயா அவர்களால் 13ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டதையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
அமைவிடம்: அர்த்தநாரி நடேஷ்வர் ஆலயம், வேலப்பூர், மஹாராஷ்டிர மாநிலம்.
No comments:
Post a Comment