🔥 *பரம சிவம் என்பது என்ன* ?
. ⚜️ சிவம் சிவம் *ஓங்கார சிவம்* *பர பிரும்மம்* பரம சிவம்
சாம்ப சிவம் சாந்த சிவம் *சதா சிவம்* பரம சிவம்
ஞான சிவம் நடன சிவம் யோக சிவம் என்றும் சிவம்
மோன சிவம் *முடிவில்லா மங்கலம்* பரமசிவம் 🌷 பூவில் மணம் போன்று *எங்கும் உள்ளது* பரம சிவம்
கண்ணில் மணி போன்று *எதிலும் இருப்பது* பரம சிவம்
உடலில் உயிர் போன்று *எல்லாம் ஆவது* பரம சிவம்
*சிவம் நீங்கி நின்றாலோ எல்லாமே ஜடம் சவம்*
⚜️ *யாவும் அறிந்த எல்லாம் வல்ல பூரணம்* பரம சிவம்
*தாவரம் தெய்வம் யார்க்கும் அருளும் ஆனந்தம்* பரம சிவம்
*அப்பனாய் அம்மையாய் அனைத்துமாய் வெளிப்படும் அருவம்* பரம சிவம்
*அவதாரம் பிறப்பு என்னும் மாசுகள் இல்லாத் தூய செம்பொருள்* பரம சிவம்
*அம்மனைத் தோற்றுவித்த அம்மை யப்பன்* பரம சிவம்
*அரிஅயனைப் படைத்துக் காக்கும் ஏக பாதர்* பரம சிவம்
*பதினொரு ருத்திரர் வீர பத்திரர் பைரவர் ஆனைமுகன் ஆறுமுகன்*
*அனைவரையும் உருவாக்கிய ஆதி மூலம்* பரம சிவம்
படைத்திடப் *பிரம்மனைப் படைக்கும் சத்தியம்* பரம சிவம்
காத்திட *விஷ்ணுவைக் காக்கும் சுந்தரம்* பரம சிவம்
ஒடுக்கும் *ருத்திரரை ஒடுக்கிடும் பேரொளி* பரம சிவம்
*ஐந்தொழில் புரியும் அனைத்தும் கடந்த பரம்பொருள்* பரம சிவம்
⚜️ *ஒன்றே கடவுள் பரம சிவம் மற்றவரெல்லாம் அடியவரே*
*பெற்றவர் ஒருவனே அம்மை யப்பன்* மற்றவரெல்லாம் அவன் குழந்தை
*அவரவர் செய் வினைக்கு ஏற்பவே பலன் தரும் அரனது அருளால்*
*அம்மனாய் பிரம்மனாய் விஷ்ணுவாய் யாரும் ஆகலாம்*
*அதற்கும் மேலாய் அவர்களும் வணங்கிட பிறவிகள் நீங்கி*
*முக்தி பெற்று சிவத்துடன் கலந்து சிவ மயமாவார் முடிவில்*
*எல்லாம் சிவ மயம் எல்லாம் சிவ மயம் எல்லாம் சிவ மயமே*
*என்றும் சிவ மயம் என்றும் சிவ மயம் என்றும் சிவ மயமே*
No comments:
Post a Comment