பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் 400 km உயரத்தில் வானவெளியில் 63 கிலோ எடையுடன் இருப்பார்.
ஒரு பொருள் பூமியை விட்டு பறந்தால் அது தனது எடையை இழக்கிறது.
கையில் உள்ள பொருளை எப்படி வீசினாலும் அது நிலத்தை அடையும் வரை எடையற்ற நிலையில் தான் இருக்கும்.
அது போல பூமியில் இருந்து அனுப்பப்படும் செயற்கை கோள்கள்
நானூறு கிமீ. உயரத்திற்கு மேல் கொண்டு செல்லப் பட்டு, கிடை மட்டமாக [Horizontal direction ] மணிக்கு 27,700 கிமீ வேகத்தில் வீசி
எரியப்படுகிறது.
அது பூமியை அடையும் வரை எடையற்ற நிலையில் இருக்கும், அதில் உள்ளவர்களும் எடையற்றே இருப்பார்கள். செயற்கை கோளை அப்படியே விட்டு விட்டால், அது பூமியை நோக்கி விழும், புவியீர்ப்பு சக்தியால் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறைந்து கொண்டே வரும்,
எனவே, அது பூமியை நோக்கி விழுந்தாலும் அதற்கும் பூமிக்கும் உள்ள தொலைவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விழனும் ஆனா விழக்கூடாது!!
பூமி கோள வடிவில் இருப்பதால் அதன் மேற்பரப்பு சமதளமாக இருக்காது,
ஒவ்வொரு எட்டு கி.மீ தொலைவு செல்லும் போதும் பூமி உருண்டை ஆதலால் நேர்கோட்டில் இருந்து 5 மீட்டர் விலகி இருக்கும்.
உயரத்தில் இருந்து எந்த ஒரு பொருளை விட்டாலும் முதல் வினாடியில் 5 மீ கீழே இறங்கியிருக்கும்.
இவை இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகிறது!!
அது, ஒரு பொருளை பக்க வாட்டில் வினாடிக்கு எட்டு கிமீ வேகத்தில் எறிந்தால் அது ஒரு போதும் தரையைத் தொடாது!!
பூமியை சுற்றிக்கொண்டே இன்னொறு நிலவாக செயல் படும்.
புவியீர்ப்பு கோளை பூமி நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும்.
நாம் நிற்பது, நடப்பது அனைத்து பொருட்களும் பூமியில் இருப்பது அனைத்திற்கும் காரணம் புவியீர்ப்பு சக்தியே.
அந்த புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து நிறுவப்பட்டதே கல் கருட பகவான்.
கோச்செங்கட்சோழன் முயற்சியால் உருவான கோவில்
ஸ்ரீனிவாசப் பெருமாள் நாச்சியார் கோயில் .
மன்னர் கோச்செங்கட்சோழன்
தேவசேனாபதியாரிடம்
தனது கோவிலில் சிலை செய்ய நல்ல சிற்பி வேண்டி வந்தார்.
மயூரசன்மன்
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன்.
முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் அழகாக பாடமாக அறிந்தவன்.
‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் நல்ல முறையில் கற்றவர்.
மன்னருக்கு மயூரசன்மனை அறிமுகம் செய்து வைத்து
எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் என்றார்.
தேவசேனாபதி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறீர்கள்?" என்று கேட்டார்.
திருநறையூருக்கு" என்றார் மன்னர்.
‘ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது.
பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செதுக்க வேண்டிய சிற்பம் எது?" என கேட்டார்.
இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சிலவற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதை கிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.
மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப் போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும் போது அவை உயிர்பெற்று விடும்."
மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.
மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்.
மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக் கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.
சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.
மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறைவாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப் பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்று விடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்து கொண்டே செல்லும். மீண்டும் மண்டபத்துக்குத் திரும்பி வரும் போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்து கொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.
செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்து விடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் இருந்து அருள் பாலிக்கிறார்.
மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடை பெறுகிறது.
கருட சேவையின் போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும்,
மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும்,
பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும் வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..
சுமார் மூன்று டன் எடைக்கு மேலே உள்ள கருட பகவானின் எடையை
பூமியிலேயே குறைத்தது எப்படி
படிப்படியாக அதிகரித்து வெளிவருவதில்
வீதியுலா முடிந்து திரும்ப உள் செல்கையில் படிப்படியாக குறைவதும்
புரியாத புதிரான விந்தைகள்தானே!
No comments:
Post a Comment