Monday, August 7, 2023

குலதெய்வத்தை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க என்ன செய்ய வேண்டும்.

_குலதெய்வ அருள் கிடைக்க_


ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் குலதெய்வம் தங்கியிருக்க வேண்டும். எந்த வீட்டில் குலதெய்வம் இல்லையோ, அந்த வீடு முழுமையான இல்லமாக நிறைவு பெறாது. வெரும் சிமெண்ட் கல் கம்பி வைத்து கட்டிய கட்டிடமாகத்தான் இருக்கும். சந்தோஷங்கள் நிறைந்த, சகல சௌபாக்கியங்களும் நிறைந்த இனிமையான இல்லமாக ஒரு வீடு மாற வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் குலதெய்வத்தின் ஆசீர்வாதம் முழுமையாக நிறைந்திருக்க வேண்டும்.

 இன்று நிறைய பேர் குல தெய்வத்தை மறந்து விட்டு தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.உங்களுக்கு குலதெய்வமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. குலதெய்வம் என்ற ஒரு வார்த்தையை உச்சரித்து, தெரியாத அந்த தெய்வத்தை மனதார நினைத்து தினமும் ஒரு முறையாவது வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் பூஜை அறையில், வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வம் தெரிந்தால் கட்டாயமாக தீபமேற்றும் போது, அந்த குலதெய்வத்தின் பெயர், அந்த வீட்டுப் பெண்ணின் வாயால் கட்டாயமாக உச்சரிக்கப்பட வேண்டும். வீட்டில் தீபம் ஏற்றும்போது, ‘குல தெய்வமே எங்கள் குலத்தைக் காக்க வேண்டும்’ என்று ஒரு முறை நினைத்தாலே போதும் குலதெய்வம் ஓடோடி வரும்.

இதுதவிர குலதெய்வத்தை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க வேறு ஒரு வழியும் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் குடும்பத்தோடு குல தெய்வத்தை தரிசனம் செய்ய செல்வம் அல்லவா? அந்த குலதெய்வ கோவிலில் இருந்து குடும்ப உறுப்பினர்கள். அனைவரின் கையாளும் சிறிதளவு மண்ணை எடுத்து, அதனுடன் ஒர் எலுமிச்சம்பழம் துணியில் வைத்து முடிச்சுப்போட்டு வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.இந்த முடிவினை கொண்டுவந்து உங்கள் பூஜை அறையில் வைத்து, விடுங்கள்.

 மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து அந்த மண்ணை ஒரு அகலமான தட்டில் கொட்டி கொஞ்சமாக மஞ்சள் தண்ணீர் தெளித்து, மண்ணை சுத்தி செய்துகொள்ள வேண்டும். பலபேர் காலடிபட்ட மண் அல்லவா அது! கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை தெளித்தால் அதில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும்.அந்த குலதெய்வ கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில், கொஞ்சமாக பச்சை கற்பூரம், ஏலக்காய் 2, கிராம்பு 2, வெட்டிவேர் சிறிய துண்டு, தர்ப்பைப்புல் 1,  இந்தப் பொருட்களையெல்லாம் சேர்த்து அந்த மணலுக்கு சாம்பிராணி தூபம் காட்டி, ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.அப்படி இல்லை என்றால் இந்த மண்ணை ஒரு மஞ்சள் துணியில் போட்டு முடிச்சாக கட்டி, வீட்டில் நில வாசப்படிக்கு உள்பக்கமாக கட்டி வைக்கலாம். அப்படி இல்லையென்றால், ஏதாவது ஒரு அலமாரியின் மேல் பக்கத்தில் யார் கையும் படாமல், இந்த குலதெய்வ மண் முடிச்சை வைத்துவிடலாம்.இந்த மணலை முடிச்சு கட்டுவதற்கு முன்பாக கொஞ்சமாக எடுத்து, சிறிய டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தீராத கஷ்டங்கள் ஏதேனும் வந்துவிட்டால், அந்த பிரச்சனையை தீர்க்க முடியாமல் தவித்து வந்தால்,  காலையில் சுத்தமாக குளித்துவிட்டு, இந்த மண்ணை எடுத்து உங்கள் நெற்றியில் குலதெய்வத்தை வேண்டி இட்டுக் கொண்டாலே போதும். பிரச்சனைகள் தானாக மறைந்து போகும்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடங்கும்போது, அது நல்லபடியாக முடிய வேண்டும் என்று இந்த குலதெய்வ மண்ணை தொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டு, அதன் பின்பு சுபநிகழ்ச்சிகளை தொடங்கலாம். இவ்வாறாக இந்த மண் இருக்கும் வீட்டில் குலதெய்வமே இருந்து காப்பதாக ஐதீகம்.

 வருடத்திற்கு ஒருமுறை பழைய மண்ணை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, புதிய மண்ணை கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...