Friday, September 1, 2023

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு 
18 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ் தான் இந்த கோவிலை கட்டினார். அதற்க்கு முன்பு புற்று வடிவில் தான் இந்த ஆலயம் இருந்தது. அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உள்ளது.

 
ஒரு முறை வெங்கோஜி மகாராஜா சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்த பொழுது கனவில் வந்த மாரியம்மன் தஞ்சையை அடுத்த ஒரு புன்னை மர காட்டில் தான் இருப்பதாக சொல்கிறார். உடனே அங்கு விரைந்த மன்னர் புன்னை காட்டில் ஒரு வெள்ளை எறும்பு புற்றை காண்கிறார் அந்த இடத்திலயே ஆலயம் எழுப்புகிறார்.

பின்பு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னரும் இந்த கோவிலை புனரமைத்தார். ஒரு முறை துலஜா ராஜாவின் மகளுக்கு கண் பார்வை இழந்த போது புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டி பார்வை திரும்ப கிடைத்ததாக சொல்லபடுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர்  இந்த கோவிலுக்கு வந்து புற்றில் மாரியம்மன் முக வடிவை அமைத்ததாகவும் ஸ்ரீசக்ரம் பதித்ததாகவும் சொல்லபடுகிறது.

இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் தினமும் அபிஷேகம் நடத்தப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மாரியம்மனுக்கு புணுகு சட்டம் சார்த்தப்படுகிறது. அந்த நேரம் திரை போடபட்டிருக்கும். 400ரூ கட்டணம் செலுத்தினால் அம்மனுக்கு தங்க பாவாடை தங்க மேலங்கி அணிந்த திவ்ய தரிசனத்தை பார்க்கலாம்.

இன்றும் வெயில் காலத்தில் அம்மா முகத்தில் முத்து போன்ற வியர்வை துளிகளை காணமுடியும். அதனாலேயே அம்மனுக்கு பெயர் முத்து மாரியம்மன். புரட்டாசி மாதம் இங்கு அம்மனுக்கு தெப்ப திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இது தவிர ஆவணி தேரோட்ட விழாவும் சிறப்பாக நடைபெறும்.

தஞ்சாவூர் - நீடாமங்கலம் சாலையில் சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...