யாளி பற்றி தெரிந்துக் கொள்வோமா?
பெரும்பாலான கோயில்களில் இந்த சிற்பத்தைப் பார்த்திருப்போம்.
ஆனால் பார்த்து விட்டு இந்த சிற்பம் ஒரு கடவுளின் வாகனமோ இல்லை ஒரு தெய்வாம்சம் பெற்ற மிருகமோ என்று நினைத்திருப்போமே தவிர இந்த சிற்பத்தைப் பற்றி யாரும் ஆராய மாட்டோம்.
உண்மை என்னவென்றால் இந்த மிருகத்தின் பெயர் யாளி. யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம் என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக் கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.
இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் உற்சவர் சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்.
சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் கி. மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது. கி. பி. 800களில் தமிழ்நாட்டின் கோயில் கட்டுமானம் செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியது.
முதன்முதலாக பராந்தக சோழன் ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டினார்கள். இதனைக் கற்றளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள்.
இதற்கு முன் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்ற இந்தியக் கோயில்களில் உள்ள சிற்பங்களில் கூட இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment