Thursday, October 26, 2023

அரிசியும்_சிவனும்_ஒன்னு -இதை#அறியாதவன்_வாயில்_மண்ணு"அன்னாபிஷேகம் பதிவு...

"#அரிசியும்_சிவனும்_ஒன்னு -இதை
#அறியாதவன்_வாயில்_மண்ணு"
அன்னாபிஷேகத்தின் சிறப்பு.

மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிட சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்து பூசிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூசை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர் , அதனால் உன்னைவிட அவர்களே சிவபூசை செய்வதில் சிறந்தவர்கள் என கண்ணன் சொல்கிறார்.
யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்கு தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளை பார்க்கிறான். ஆனால் சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான், நடந்தவற்றை சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை , ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான்.
அப்போது கண்ணன் , உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்க பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா என கேட்க , அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு என பழமொழியே வந்தது என்கிறான்.
கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்கு சமம் தானே? ஒரு பானை நிறைய சாதம் வடித்தபின் அதனை வணங்கினால் பல ஆயிரம் லிங்கங்களை வணங்கியதற்கு சமம் தானே அதனால் ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்து பூசித்த அவரே சிறந்த சிவபக்தர். என்கிறார் கண்ணன்.
எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்து பூசித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில் சாதம் வெண்கல பானையிலோ, குக்கரிலோ வடித்தபின் அதற்க்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும் வைத்து , முடிந்தால் வெற்றிலை,பாக்கு வாழைபழம் இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
#குறிப்பு  28 .10. 2023 சனிக்கிழமை அன்று சிவாலயங்கள் தோறும் சிறப்பான அன்னாபிஷேகம் நடைபெறும்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...