Monday, October 9, 2023

குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

_குல தெய்வ கோயிலிலிருந்து இதை ஒரு கைப்பிடி மண் கொண்டு வந்தால், கஷ்டமெல்லாம் காணாமல் போகும்!**_
கிரக நிலைகளின் பெயர்ச்சி, காலத்தின் கட்டாயம், விதியின் சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக குடும்பத்திற்கு வரக் கூடிய துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே வரும்.

இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது என்னவோ நம்முடைய குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் தான். குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இஷ்ட தெய்வத்தின் அருள் கிடைக்கும்.

மாதந்தோறும் குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. அப்படி மாதந்தோறும் செல்ல முடியாதவர்கள், 2 மாதங்களுக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு 3, 4 முறை என்று சென்று வழிபாடு செய்ய வேண்டும். குல தெய்வ வழிபாடு ஒன்று பெரிய கஷ்டம் இல்லையே. வீட்டில் கஷ்டம், துன்பம் துயரம் என்று எதுவும் வராமல் இருக்க குல தெய்வ கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும். அது என்ன என்றால், ஒரு கைப்பிடி மண் தான். குல தெய்வ கோயிலில் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி இருவரும் சேர்ந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து அதனை மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ள வேண்டும்.

அதனை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும். ஒரு செம்புத் தகட்டில் உங்களது குல தெய்வத்தின் பெயரை எழுதி சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணியிலேயே முடிச்சு போட்டு கட்டி வீட்டில் ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிட வேண்டும். அதாவது உயரமான இடத்தில் வைத்து விட வேண்டும். தினந்தோறும் பூஜை செய்யும் போது இந்த முடிச்சுக்கும் ஊதுவத்தி, தீபாராதனை காண்பிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் குல தெய்வ கோயிலுக்கு செல்கிறீர்களோ அப்போதெல்லாம் புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விட வேண்டும். இவ்வாறாக குல தெய்வ கோயிலிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் குல தெய்வமே குடி கொண்டிருக்கும். உங்களது முன்னோர்கள் வந்து சென்று காலடி பட்ட இடம். இனி, நீங்களும், உங்களது சந்ததியினரும் செல்லக் கூடிய இடம் தான். அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.

தீராத கஷ்டம், குலதெய்வக் கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அந்த முடிச்சை பிரித்து அதிலிருக்கும் மண்ணை கொஞ்சமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு குல தெய்வத்தின் பெயரை சொல்லி வர, எல்லா கஷ்டமும் தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதனை செய்து பார்க்கலாம்..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம். காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல...