Sunday, November 26, 2023

சோகம் தீர்க்கும் திங்கட் கிழமை சோமவார விரதம்

சோகம் தீர்க்கும் திங்கட் கிழமை சோமவார விரதம்
திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெரு மானை வழிபடுவது சிறப்புக் குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெரு மான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.

சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் பெயரில் உருவானதே சோமவார விரதமாகும்.

இந்த விரதத்தை கடை பிடிப்பவர்கள், துன்பங்aகள், பாவங்கள் விலகுவதுடன், நல்ல வாழ்க்கைத் துணை யையும் பெறுவார்கள். இந்து  திருமணங் களில் அருந்ததி பார்ப்பது என்று ஒரு நிகழ்வு உண்டு. கற்புக்கரசி யான அந்த அருந்ததி தேவியை வசிஷ்ட முனிவர் தன் வாழ்க்கைத் துணைவியாக பெற்றது, சோமவார விரதத்தின் வாயிலா கத்தான். எனவே பெண்கள் மட்டு மின்றி, ஆண்களும் இந்த விரதத் தைக் கடைப்பிடித்து நல்ல வாழ்க் கைத் துணையை அடையலாம்.

சோமவார விரதங்களில், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்கள் பிரசித்திப் பெற்றதாக விளங்குகிறது. கார்த்திகை மாத சோமவாரங்க ளில், அனைத்து சிவாலயங்களி லும், இறைவனுக்கு சங்காபிஷே கம் செய்யப்படும். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பதாக ஐதீகம். எனவே அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதாக சொல்கிறார் கள்.

கார்த்திகை திங்கட்கிழமை யான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்த தம்பதியர் கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

இது தவிர கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் எந்த பூஜையாக இருந்தா லும், அது பன்மடங்கு பலன் அளிக்கக்கூடியதாகும்.
அந்த பூஜைகளால் பாவங்கள், வறுமை விலகி, வளமான வாழ்வு அமையும். கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர்,ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள் வதாக ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள்.

வில்வ இலையால் சிவனை பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவார்கள். 
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...